Tamil Bayan Points

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்பதன் விளக்கம் என்ன?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

Last Updated on June 20, 2022 by

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால்

குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன?

பதில் :

அல்லாஹ் அடியார்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறான் என்பது தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்திகள் :

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ )123
6469- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ اللَّهَ خَلَقَ الرَّحْمَةَ يَوْمَ خَلَقَهَا مِئَةَ رَحْمَةٍ فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً وَأَرْسَلَ فِي خَلْقِهِ كُلِّهِمْ رَحْمَةً وَاحِدَةً فَلَوْ يَعْلَمُ الْكَافِرُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللهِ مِنَ الرَّحْمَةِ لَمْ يَيْأَسْ مِنَ الْجَنَّةِ وَلَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللهِ مِنَ الْعَذَابِ لَمْ يَأْمَنْ مِنَ النَّارِ.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்த போது அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். 

ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ள மாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்.

நூல்: புகாரி (6469)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 96)
7150 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ أَبِى هُرَيْرَةَ

عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنِّ وَالإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ فَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَى وَلَدِهَا وَأَخَّرَ اللَّهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ் வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கி னால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன.

அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.

நூல்: முஸ்லிம் (5312)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 9)
5999- حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ ، قَالَ : حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،

قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْىٌ فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبْيِ قَدْ تَحْلُبُ ثَدْيَهَا تَسْقِي إِذَا وَجَدَتْ صَبِيًّا فِي السَّبْيِ أَخَذَتْهُ فَأَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَتَرَوْنَ هَذِهِ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ قُلْنَا لاَ وَهْيَ تَقْدِرُ عَلَى أَنْ لاَ تَطْرَحَهُ فَقَالَ اللَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا.

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற் காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.

அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்! என்றார்கள். நாங்கள், இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5999)

உலகத்தில் உள்ளவர்களில் அதிகம் அன்பை பொழிவது தாய்தான். தாய்க்கு நிகாராக எந்த மனிதரையும் அன்புக்கு எடுத்துக்காட்டாக நாம் சொல்ல முடியாது. அந்தளவுக்கு தாயின் அன்பு அளப்பெரியது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் அன்புக்கு தாயை ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்கள்.

இதிலும் தாய் அளவுக்கு என்று குறிப்பிடவில்லை. தாயைவிடவும் அல்லாஹ்வின் அன்புதான் கூடுதலானது என்றே குறிப்பிடுகிறார்கள். தாயின் அன்பை விட 70 மடங்கு அதிகமாக அல்லாஹ் அன்புள்ளவன் என்ற செய்தி நாம் அறிந்த வரை நபிமொழிகளில் இல்லை.