Tamil Bayan Points

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் “சாதி”

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 22, 2019 by

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சாதி

சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக் கல்லாக இருக்கிறது என திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் இன்னும் சாதி கொடுமை நிலவுவது மிகப் பெரிய அவமானமாகும். சாதியின் பெயரால் ஒருவருக்கொருவர் பாகுபாடு பார்ப்பது துயரமானது. சாதி பாகுபாட்டின் காரணமாக தனி மனிதர்கள் மட்டுமல்லாமல் சமூகத்தியே சீரழித்து விடும்.

ஒரே மாதிரியான ரத்தம், சதை, மூளை, இதயம் கொண்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்துவது முட்டாள்தனமானது. சக மனிதர்களை அடிமைப் படுத்தும் சாதி அமைப்பை ஒழிக்காத சமூகம் முன்னேற முடியாது. மக்களிடம் கெட்ட எண்ணங்களை வள்ர்த்தெடுக்கும் சாதியை அழிக்காமல் இந்தியா முன்னேற முடியாது. உலக அளவில் வேகமாக வளரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக் கல்லாக இருக்கிறது. என தனது உரையின் போது தலாய் லாமா குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இலங்கையில் இந்த புத்த மதத்துறவிகள் தான் வெறியாட்டம் ஆடி வருகின்றனர் அது தலாய்லாமாவுக்கு தெரியாதா? தலாய்லாமா போன்ற தலைவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் மனிதர்களிடையே நிறம், இனம், மொழி, ஜாதி அடிப்படையில் எண்ணற்ற பாகுபாடுகளும், துவேஷங்களும் இன்று வரை காணப்படுகின்றன.

அறிவுக்குப் பொருத்த மில்லாத தேவையற்ற நம்பிக்கைகளால் கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை ஜாதி பெயரால் கொலை, கற்பழிப்பு சொத்து சூரையாடல், கலவரங்கள் ஆகியவை நடந்து வருகின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மனித இனத்தில் உயர்ந்தவர்கள் என்ற மாயை தான் இவை போன்ற தேவையற்ற கலவரங்களுக்கு காரணமாக உள்ளது. புத்த துறவிகள் மியான்மர் மற்றும் இலங்கையில் வெறியாட்டம் ஆட இதுதான் காரணம்.

இது போன்ற மூடத்தனமான போக்குகளைத் தவிடு பொடியாக்கி மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்காமல் ஒரு தாய் மக்களாக, ஒரே இனமாக காட்டும் ஒரு கொள்கை இருக்கிறதென்றால் அது இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை இஸ்லாமிய மார்க்கம் பிரகடனப் படுத்துவதைப் பாருங்கள்.

மனிதர்களே..! நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன்.

(அல்குர்ஆன் – 49 : 3.)

இன்று இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் யாரும் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படடவர்கள் அல்ல, இஸ்லாம் கூறும் இந்தக் கொள்கையின் பால் ஒன்றிணைந்தவர்களே. இன்று உலக அளவில் கறுப் பர்கள், வெள்ளையர்கள், பன்னாட்டவர்கள், பல மொழிகள பேசுபவர்களை ஒன்று படுத்தும் ஓர் உன்னத வாழ்க்கை நெறி இஸ்லாம் மட்டும் தான். உண்மையில் தலாய் லாமா போன்ற தலைவர்கள் சாதிகளை ஒழிக்கப் பாடுபடுபவராகவும் , எதிர்ப்பவராகவும் இருந்தால் இஸ்லாத்தை திறந்த மனதுடன் அனுக வேண்டும். அப்போது தான் சாதி எனும் கொடுமையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை மீட்டெடுக்க முடியும்.

Source: unarvu  ( 02/06/17 )