Tamil Bayan Points

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on April 7, 2020 by

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். 

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன்-டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உடற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில்யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள்.

அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள்.

அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

(அல்குர்ஆன்:34:6)