Tamil Bayan Points

இரத்த தானம் அறிய வேண்டிய தகவல்கள்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on September 24, 2016 by Trichy Farook

 

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதினை மிகாதவராகவும் இருத்தல்அவசியம்.
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
நடைமுறைகள்

மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல்அவசியம்.
புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. ஆகவேபுகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு,உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.
இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 4 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம்செய்ய வேண்டும்.
இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்
இரத்த தானம் செய்யக்கூடாதவர்கள்

கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பக தவிர்க்க வேண்டும்.
எய்ட்ஸ்
மேக நோய்
நீரழிவு நோய்
இரத்த அழுத்தம்
வலிப்பு நோய்
இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும
தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்
வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பதுநல்லது.