Tamil Bayan Points

இறந்துபோன மனிதநேயம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on December 31, 2019 by

இறந்துபோன மனிதநேயம்

ஆம்புலன்ஸ் வாகனம் மறுக்கப் படுவதால் வட மாநிலங்களில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந் துள்ளது. வட மாநிலத்தவர்கள் இரக்க மற்றவர்கள் மனிதாபிமான மற்றவர்கள் என்றெல்லாம் விதவிதமாக சொல்லியும் எழுதியும் முடித்தவர்களுக்கு கடந்த வாரம் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு அதனால் ஒரு உயிர் பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் சுத்துக்கேணி. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அங்கிருக்கும் ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சுப்பிரமணிக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது தங்கை, அருகில் இருந்த புதுச்சேரி அரசு மருத்துவ மனையைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார். ஆனால் அந்தப் பகுதி புதுச்சேரி எல்லைக்குள் வராத காரணத்தால் ஆம்புலன்ஸை அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி தன் அண்ணன் சுப்பிரமணியை செங்கல் அள்ளும் தள்ளுவண்டியில் வைத்து அவரது தங்கையும் சூளையில் வேலை செய்யும் ஒரு பணியாளும் தள்ளிச் சென்றுள்ளனர். ஒரு வகையாக புதுச்சேரி மருத்துவமனையை அடைந்து தனது அண்ணனுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவரை அனுகியுள்ளனர். சுப்பிரமணியைப் பரி சோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.

கொஞ்சம் முன்னாள் கொண்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தினர்களிடம் ஆம்புலன்ஸைக் கேட்டும் அனுப்பி வைக்காத காரணத்தால் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து போனார். சுவாசக் கோளாறு மற்றும் கடும் வெயிலில் திறந்த வெளி தள்ளுவண்டியில் கொண்டு வரப்பட்ட சுப்பிரமணி உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

பாண்டிச்சேரி வேறு மாநிலமாக இருந்தாலும் அங்கேயும் தமிழ்பேசும் மக்கள்தான் வாழ்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் உயிர் காக்கும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பதில் எந்தக் குற்றமும் வந்து விடப் போவதில்லை. சுப்பிரமணியை செங்கல் சூளை தள்ளுவண்டியில் படுக்க வைத்து அவரது தங்கை இழுத்துச் செல்லும் பரிதாபக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிகமான மக்கள் அதைப் பகிர்ந்துள்ளனர். மனிதாபி மானமற்றவர்களின் இந்தக் கொடூரச் செயலை சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Source: unarvu (08/11/2019)