Tamil Bayan Points

இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை) -2

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 17, 2023 by Trichy Farook

இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை) -2

கடற்படையில் யுத்தம் செய்வது பற்றிய முன்னறிவிப்புகள்

‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்’ என்று கூறினார்கள்.

உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன். அப்போது எனக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள்.

அப்போதும் நான், ‘ஏன் சிரிக்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் புனிதப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்’ என்று முன்புபோன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஹராம் (ரலி)
நூல் : புகாரி-2800 , 2878, 2895, 7002

தூதர் என்று தன்னை கூறிக்கொண்ட பொய்யர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள்

 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
بَيْنَمَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي المَنَامِ: أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ، يَخْرُجَانِ بَعْدِي ” فَكَانَ أَحَدُهُمَا العَنْسِيَّ، وَالآخَرُ مُسَيْلِمَةَ الكَذَّابَ، صَاحِبَ اليَمَامَةِ

நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ‘அதை ஊதிவிடுவீராக!’ என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன.

நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-3621 , 4374, 4375, 4379, 7034, 7037

இறைத்தூதர் என்று சொன்ன இரண்டு நபர்களும் கொல்லப்பட்டு அவர்கள் பொய்யர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டி தந்த முன்னறிவிப்பு உண்மையாயிற்று. இதுமட்டுமின்றி நபி (ஸல்) அவர்கள் எனக்கு பின்னால் என்னுடைய உம்மத்துகளில் முப்பது பேர்கள் தன்னை தூதர் என்று கூறி வருவார்கள். அவர்கள் வராமல் மறுமை நாள் வராது என்றார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-3609 , 7109

பெண்களின் எண்ணிக்கையை பற்றி அறிவித்த முன்னறிவிப்புகள்

 أَخْبَرَنَا أَنَسٌ، قَالَ: لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمُوهُ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لاَ تَقُومُ السَّاعَةُ» وَإِمَّا قَالَ: «مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يُرْفَعَ العِلْمُ، وَيَظْهَرَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِلْخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ»

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவதும் ‘மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும்; அல்லது ‘இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது’.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : புகாரி-6808 , 5231, 5577, 5580, 5581

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் முன்னறிவிப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று கூறுவார்கள். அப்போது ‘நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்’ என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம் (அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)’ என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயரங்க சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரை குறையாகப்) பிரசவித்துவிடுவாள்; பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், (அந்த அளவிற்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்.’

நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்’ என்று கூறிவிட்டு பிறகு, ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்’ என்று கூறினார்கள்.

பின்னர் ‘(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மகிழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்களில், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒருபங்கினராக இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி-4741 

தாவரங்களை பற்றிய முன்னறிவிப்புகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் எவ்வாறு ஆண், பெண் என்று ஜோடி உள்ளதை போன்று தாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடி உள்ளதாக நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். இதுவும் ஒரு முன்னறிவிப்புதான்.

 وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا‌ ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ‌ يُغْشِى الَّيْلَ النَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 13:03)

 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

(அல்குர்ஆன்: 20:53)

 اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏

பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

(அல்குர்ஆன்: 26:07)

பூமியில் மனிதன் வாழ்வதற்குரிய வசதிகளைப் பற்றிய முன்னறிவிப்புகள்

இந்த உலகை சுற்றியும் பல்வேறு வலிமை வாய்ந்த கோள்கள் இருந்தும் பூமியில் தான் மனிதன் வாழ்வதற்குரிய வசதிகள் இருக்கின்றன. இதை பற்றி ஆயிரத்து நானூரு வருஷத்திற்கு முன் ஒரு மனிதர் சொல்வாரேயானால் அது அல்லாஹ்வின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்.

 وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

(அல்குர்ஆன்: 07:10)

وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன”என்றும் நாம் கூறினோம்.

(அல்குர்ஆன்: 02:36)

 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰ

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

 (அல்குர்ஆன்: 20:53)

ஹுனைன் போரில் ஏற்பட்ட செய்தியை பற்றிய முன்னறிவிப்புகள்

 عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ} [الأعراف: 138] وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் என்று சொல்லக்கூடிய மிக கடினமான போர் ஒன்றில் பங்கெடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வரும் போது முஷ்ரிக்குகளுக்கு சொந்தமான, புனிதமாக கருதக்கூடிய ஒரு மரத்தை காண்கிறார்கள். முஷ்ரிக்குகள் அந்த மரத்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் தொங்க விட்டபடி வைத்திருப்பார்கள். அதை கண்ட ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கெல்லாம் புனிதமாக கருத ஒரு மரம் இருக்கின்றது.

அதேபோன்று எங்களுக்கு ஏதேனும் மரம் உண்டா என்று கேட்டார்கள். அதை கேட்ட நபியவர்கள், “அல்லாஹ் தூய்மையானவன்”, மூஸாவுடைய கூட்டத்தார் கூறுவதை போன்றல்லவா இருக்கின்றது நீங்கள் கூறுவது? பல கடவுள்களை வணங்கியவர்களை பார்த்து மூஸாவின் சமுதாயத்தினர் மூஸாவை பார்த்து மூஸாவே! அவர்களை போன்று எங்களுக்கும் பல கடவுள்களை தாருங்கள் என்றார்கள். அல்லாஹ் மூஸாவுக்கு காட்டிய அருளை (கடலை பிளந்து) பார்த்தும் இவ்வாறு கூறினார்கள். உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் வழிமுறையை அப்படியே நீங்கள் பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ-2180 (2106)

பொருளாதார வளர்ச்சி மிக அதிகமாகும் என்ற முன்னறிவிப்பு

ஒரு மன்னர் தம் மக்களுக்கு வாரி வாரி கணக்கில்லாமல் கொடுப்பார். அப்படி கொடுக்கும் போது அதனை வாங்க அவன் மறுப்பான் என்றும் மேலும் அதனை வெறுக்கவும் செய்வான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ – وَهُوَ القَتْلُ القَتْلُ – حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை – கியாம நாள் ஏற்படாது.’

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1036 , 7121

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ المَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ: لاَ أَرَبَ لِي

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்.’

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1412 

تَصَدَّقُوا، فَسَيَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَيَقُولُ الرَّجُلُ: لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لقَبِلْتُهَا مِنْكَ، فَأَمَّا اليَوْمَ فَلاَ حَاجَةَ لِي فِيهَا

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.’

அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி)
நூல் : புகாரி-1424 

நபி ஈஸா அவர்களின் வருகையைப் பற்றிய முன்னறிவிப்புகள்

நீதி செலுத்தக்கூடிய ஒரு நடுவராகவும், நீதிமானாகவும் மர்யமுடைய மகன் நபி ஈஸா அவர்கள் வருகை தராமல் யுக முடிவு நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனில் காட்டி தந்தான்.

وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا (156) وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158) وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (159)

அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை.

அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

(அல்குர்ஆன்: 04:156-159)

நபி (ஸல்) அவர்ககள் யுக முடிவு நாளில் ஈஷா நபி அவர்களின் வருகையின் போது நடக்கவிருக்கும் நிகழ்வுகளை பற்றி விவரிக்கின்றார். அனைவரும் ஒருமித்த கொள்கைக்கு ஒன்றாக வரும் போது ஜிஸ்யா என்ற வரியை ஈஸா நபி அவர்கள் தள்ளுபடி செய்வார்; பணம் பெருக்கெடுத்து ஓடும்;

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ، حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.)

செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-2476 , 3448

ஈஸா நபி அவர்கள் இறங்கி வரும் போது ஏற்படுகின்ற நம்பிக்கை போன்று வேறு ஏற்படாது. ஏனென்றால், மக்களுக்கு முன்னாள் அவர்கள் காட்சி தருவதால் மக்களுக்கெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உண்மையாக நம்புவார்கள்.

وَلَتَذْهَبَنَّ الشَّحْنَاءُ وَالتَّبَاغُضُ وَالتَّحَاسُدُ

மேலும், ஈஸா நபியவர்கள் வரும் போது பொறாமை, போட்டி, சண்டை, சச்சரவு போன்ற அனைத்தும் இல்லாமல் போகும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: முஸ்லிம்-243 (221)

فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ، فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ، بَيْنَ مَهْرُودَتَيْنِ، وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ، إِذَا طَأْطَأَ رَأْسَهُ قَطَرَ، وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ، فَلَا يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلَّا مَاتَ، وَنَفَسُهُ يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ، فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ، فَيَقْتُلُهُ

தஜ்ஜால் பூமியில் இறங்கிய நாளிலிருந்து நாற்பதாவது நாள் ஈஸா நபி அவர்கள் திமிஷ்க் (டமாஸ்கஸ்) என்ற ஊரிலுள்ள ஒரு வெள்ளை கோபுரத்தில் குங்குமப்பூ நிறத்திலுடைய மேலாடை மற்றும் கீழாடைவுடன் இரண்டு வானவர்களின் சிறகுகளின் மேல் கை வைத்தவர்களாக இறங்குவார்கள். அவர் தலை அசைத்தால் தண்ணீர் கொட்டும். தலையை தூக்கினால் முத்துக்களை போன்று தண்ணீர் சிதறும் என்ற அளவிற்கு ஈரத்தலையுடன் இறங்குவார்கள். நபி ஈஸாவின் வருகையை பார்த்ததும் தஜ்ஜால் உருக ஆரம்பித்துவிடுவான். பிறகு, ஈஸா நபியின் கையால் அவன் கொல்லப்படுவான்.

நூல் : முஸ்லிம்-5629 (5157)

 فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ أَمِيرُهُمْ: تَعَالَ صَلِّ لَنَا، فَيَقُولُ: لَا، إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللهِ هَذِهِ الْأُمَّةَ

ஈஸா நபி அவர்கள் இறங்கும் போது அப்போது அந்த பகுதிக்கு தலைமை தாங்கி ஒருவர் தலைவராக இருப்பார். அப்போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டவுடன் அனைவரும் ஈஸா நபி அவர்களை பார்த்து எங்களுக்கு தொழுகை நடத்துங்கள் என்று கூறுவார்கள். அப்போது, ஈஸா நபியவர்கள் இல்லை. உங்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டும். அது அல்லாஹ் உங்களுடைய உம்மத்திற்கு கொடுத்த கண்ணியம். நானோ வேறொரு சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்பார்கள்.

நூல்: முஸ்லிம்-247 (225)

மேலும், இமாமாக தொழவைப்பவரின் பெயர் இமாம் மஹ்தி. நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இமாம் மஹ்தி அவர்கள் என்வழியும், என் மகள் பாத்திமா வழிதோன்றவர்களும் ஆவார்.

நூல்: …

فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ، فَيَقْتُلُهُ

ஈஸா நபி அவர்கள் திமிஷ்க் (டமாஸ்கஸ்) என்ற ஊரில் இறங்கிய பின்னர் தஜ்ஜால் இருக்கக்கூடிய பைத்துல் முகத்தஸ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள லுத் என்ற கிராமத்தில் தான் ஈஸா நபியவர்கள் தஜ்ஜாலை கொலை செய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்-5629 (5158)

وَوَرَاءَهُ الدَّجَّالُ مَعَهُ سَبْعُونَ أَلْفَ يَهُودِيٍّ، كُلُّهُمْ ذُو سَيْفٍ مُحَلًّى وَسَاجٍ، فَإِذَا نَظَرَ إِلَيْهِ الدَّجَّالُ ذَابَ، كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ، وَيَنْطَلِقُ هَارِبًا، وَيَقُولُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: إِنَّ لِي فِيكَ ضَرْبَةً، لَنْ تَسْبِقَنِي بِهَا، فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ اللُّدِّ الشَّرْقِيِّ، فَيَقْتُلُهُ، فَيَهْزِمُ اللَّهُ الْيَهُودَ، فَلَا يَبْقَى شَيْءٌ مِمَّا خَلَقَ اللَّهُ يَتَوَارَى بِهِ يَهُودِيٌّ إِلَّا أَنْطَقَ اللَّهُ ذَلِكَ الشَّيْءَ، لَا حَجَرَ، وَلَا شَجَرَ، وَلَا حَائِطَ، وَلَا دَابَّةَ، إِلَّا الْغَرْقَدَةَ، فَإِنَّهَا مِنْ شَجَرِهِمْ، لَا تَنْطِقُ، إِلَّا قَالَ: يَا عَبْدَ اللَّهِ الْمُسْلِمَ هَذَا يَهُودِيٌّ، فَتَعَالَ اقْتُلْهُ

அந்நேரத்தில் தஜ்ஜாலிடம் எழுபதாயிரம் யஹூதிகள் ஆயுதபாணிகளுடன் இருப்பார்கள். அல்லாஹ் அழிக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு மரங்களும், கற்களும், பொருள்களும் பேசும். இங்கு ஒரு யஹூதி இருக்கின்றான்; இங்கு ஒரு யஹூதி இருக்கின்றான் என்று காட்டி கொடுக்கும். அவர்கள் அனைவரும் அடியோடு அழிக்கப்படுவார்கள்.

நூல் : இப்னு மாஜா-4077 , அபூதாவூத்…

யஃஜூஜ், மஃஜூஜ் பற்றிய முன்னறிவிப்புகள்

فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللهُ إِلَى عِيسَى: إِنِّي قَدْ أَخْرَجْتُ عِبَادًا لِي، لَا يَدَانِ لِأَحَدٍ بِقِتَالِهِمْ، فَحَرِّزْ عِبَادِي إِلَى الطُّورِ  وَيَبْعَثُ اللهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ، وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ،

அல்லாஹ் ஈஸாவிடம், ஈஸாவே! அவர்களை கொலை செய்வதற்கு எவரிடமும் உன் அளவிற்கு சக்தி இல்லை. ஆனாலும், ஒரு சோதனை உன்னை நோக்கி வர இருக்கிறது. ஆகையால், உன் மக்களை தூர் சீனா என்ற மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவான். அப்போது தான் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்ப இருக்கிறான்.

நூல் : முஸ்லிம்-5629 (5228)

قَالُوا يَاذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94) قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96) فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا (97) قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا (98)

“துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்” என்றார்.

(தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமானபோது ‘ஊதுங்கள்!’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும்போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.

(அல்குர்ஆன்: 18:94-98)

கிழக்கே உதிர்த்த சூரியன் மேற்கே உதிக்கின்ற முன்னறிவிப்பு

இதுவரை அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் மூலம் மனிதன் திருந்தி பாவமன்னிப்பு கோர சில வாய்ப்புகளை அல்லாஹ் ஏற்படுத்தினான். ஆனால், இந்த முன்னறிவிப்பு வந்துவிட்டால் இதற்கு பிறகு மனிதனால் தப்பிக்கவே முடியாத அளவிற்கு இறுதி முன்னறிவிப்பாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கிழக்கே உதிர்த்த சூரியன் மேற்கே உதிர்கின்ற வரை யுக முடிவு நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உருண்டையான பூமி கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி உதிர்க்க வேண்டுமென்றால் சூரியன் தான் சுழலும் திசையை நேர்க்கெதிராக மாற்ற வேண்டும்.

தற்போது எவ்வாறு சுற்றுகிறதோ அதற்கு நேர் எதிராக சுற்றினால் சூரியன் மேற்கிலிருந்து சூரியன் உதிர்க்கும். அவ்வாறு சூரியன் மேற்கு திசையிலிருந்து உதிக்க ஆரம்பித்தால் மனிதன் அதனுடைய பின் விலையுகளையும் சந்திக்க நேரிடும். நாம் கருவில் இருக்கும் போது சூரியன் கிழக்கு திசையிலிருந்து உதிர்த்ததை பழகிவிட்டோம். அதுவே மாறி செயல்படும் போது அதை ஏற்பது மிகக்கடினம். அவ்வாறு நடக்கும் போது அனைத்து மக்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை) என்று கூறுவார்கள்.

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ} [الأنعام: 158]

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியில் இருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-4635 , 4636

ஒவ்வொரு நாளும் இரவில் அல்லாஹ் தன் இரு கைகளை நீட்டி மனிதனிடம் பகலில் பாவம் செய்தவனே! என்னிடம் பாவமன்னிப்பு தேடு. நான் மன்னிக்கிறேன் என்றும், பகலில் அல்லாஹ் தன் இரு கைகளை நீட்டி மனிதனிடம் இரவில் பாவம் செய்தவனே! என்னிடம் பாவமன்னிப்பு தேடு. நான் மன்னிக்கிறேன் என்றும் சூரியன் மேற்கு திசையை நோக்கி உதிக்கும் வரை கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அனைத்து முன்னறிவிப்புகளும் நடைபெற்ற பின்னர் அல்லாஹ் இவ்வுலகை அழிக்க தொடங்குவான். அதற்காக ஸூர் ஊதப்படும். முதல் ஸூர் ஊதப்படும் போது அனைவரும் மரணிப்பார்கள். இரண்டாவது ஸூர் ஊதப்படும் போது அனைவரும் உயிர்த்தெழுவார்கள்.

 وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ ؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ‏

 ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.

 (அல்குர்ஆன்: 39:68)

இந்த முன்னறிவிப்புகளின் மூலம் நமக்கு முன்னிருந்த நம்பிக்கையை விட இன்னும் மிக ஆளமான, பலமான நம்பிக்கை நம்மிடத்தில் இருக்க வேண்டும். அல்லாஹ் தான் இந்த மார்க்கத்தை தந்திருக்கிறான்; அல்லாஹ் தான் இந்த தூதரை தந்திருக்கிறான்; அல்லாஹ் தான் இந்த வேதத்தை தந்திருக்கிறான் என்று ஒரு கடுகளவிற்கும் சந்தேகம் இல்லாத வகையில் நமது நம்பிக்கையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 

ஆக, மனிதன் தன்னை கியாமத் வருவதற்கு முன் எச்சரிக்கை செய்து திருத்தி கொள்வதற்காகவே தன்னுடைய தூதர் மூலம் சில முன்னறிவிப்புகளை கூறி எச்சரிக்கிறான். இதை நாம் நன்கு விளங்கி நல்ல படிப்பினை பெற்று நல்லோர்களின் வரிசையில் நாமும் இடம்பெற அதற்கான நல்லறங்களை செய்ய முற்பட வேண்டும் என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.