Tamil Bayan Points

இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

Last Updated on November 30, 2020 by Trichy Farook

இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6

6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதியிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7

 

6726 அவர்கள் இருவரிடமும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் செல்வத்திலிருந்து தான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தச் செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன் என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.8

6729. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.10

 

6727 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அனைத்தும் புகாரியில் வரும் ஹதீஸ்கள்.