Tamil Bayan Points

ஏகத்துவமும் எதிர்ப்புகளும்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on July 22, 2017 by Trichy Farook

முன்னுரை

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இறைத்தூதரர்கள் செய்தார்கள். இந்த பணியை செய்த காரணத்தினால் ஏராளமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

நபி மூஸா (அலை)

ஏகத்துவக் கொள்கையை மக்களிடம் சொன்ன இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களும் ஒருவர். அவர்கள்தான் இறைத்தூதர் என்பதற்கு பிர்அவ்னிடமும் அக்கால மக்களிடம் இறைவன் கொடுத்த அற்புதத்தை எடுத்துரைத்தார்கள்.

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏  اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى

“மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” என்று இறைவன் கேட்டான். “இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன” என்று அவர் கூறினார். “மூஸாவே! அதைப் போடுவீராக!” என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. “அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்” என்று அவன் கூறினான். உமது கையை உமது விலாப்புறத்துடன் சேர்ப்பீராக! தீங்கற்ற வெண்மையாக அது வெளிப்படும். இது மற்றொரு சான்று. நமது மகத்தான சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்டுகிறோம். நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்)

(அல்குர்ஆன் 20:17-24)

இறைவனின் கட்டளைப்படி பிர்அவ்னிடம் சென்று அற்புதத்தைக் காட்டியபோது இது அற்புதம் என்பைதை ஏற்க மறுத்தவன் இது போன்று செய்பவர்கள் என்னிடம் உள்ளனர் என்று கூறி அதை நிரூபிக்க முன்வந்தான்.

وَلَـقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى‏ فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏

அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான். “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?” என்று அவன் கேட்டான். “இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை நாமும் நீரூம் மீறாதிருப்போம்” (என்றும் கூறினான்.) “பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்” என்று அவர் கூறினார். ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப்படுத்தினான். பின்னர் வந்தான். “உங்களுக்குக் கேடுதான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்! அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் இழப்பை அடைந்து விட்டான்” என்று அவர்களிடம் மூஸா கூறினார். அவர்கள் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர். “இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர்” எனக் கூறினர். “உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்” (என்றனர்) “மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று கூறினோம். “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.) உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.

(அல்குர்ஆன் 20:56-70)

இறைவனின் அற்புதங்களுக்கு மத்தியில் சூனியக்காரர்களின் வித்தைகள் தோல்வியடைந்து சூனியக்காரர்கள் ஓரிறைக் கொள்கை ஏற்றதற்காக அவர்களை மாறுகால் மாறுகை வெட்டி சிலுவையில் அறைவேன் என்று எச்சரித்தான். ஓரிறைக் கொள்கை உண்மையில் விளங்கி ஏற்றவர்கள் பிர்அவ்னின் தண்டனைகளுக்கு பயப்படவில்லை.

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ؕ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى‏ اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِؕ‌ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى‏

“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்த வனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்று அவர்கள் கூறினார்கள்.

“எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பிவிட்டோம். அல்லாஹ்வே சிறந்த வன்; நிலையானவன்” (என்றும் கூறினர்.)

(அல்குர்ஆன் 20:71-73)

ஓரிறைக் கொள்கையை உண்மையில் புரிந்து ஏற்றுக் கொண்டவர்கள் எந்த மிரட்டலுக்கும் தண்டனைகளுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பது இவர்களின் வாழ்வின் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.

பிர்அவ்னின் காலத்தில் ஓரிறைக் கொள்கை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கப்பட்டு வந்தது பிர்அவ்னுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தை முற்றிலுமாக அழிக்க எண்ணியவன் மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களையும் அழிப்பதற்கு பெரும் படையுடன் சென்றான். ஆனால் இறுதி வெற்றியை ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றியவர்களுக்கு வழங்கி பிர்அவ்னை அல்லாஹ் அழித்தான்.

فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ‏ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏

காலையில் (ஃபிர்அவன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர்.இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.

(அல்குர்ஆன் 26:60-67)

இப்ராஹீம் நபி சந்தித்த சோதனைகள்

ஓரிறைக் கொள்கை மக்களிடம் மிகத் தெளிவாக புரியும் விதத்தில் யாருக்கும் அஞ்சாமல் சொன்னவர்களில் முக்கியமானவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَ‌ۚ‏ قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம். “நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.”நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.”அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர்தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள்தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.”அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.) “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.”நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு” என்று கூறினோம்.

(அல்குர்ஆன் 21 :51-69)

ஏகத்துவக் கொள்கையை அவர்கள் புரியும் விதத்தில் விளக்கியதற்காக அவர்கள் நெருப்புகுண்டத்தில் தூக்கி எறிப்பட்டார்கள். இறைவனின் அருளால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதுபோன்ற சோதனைகள் ஏகத்துவாதிகளுக்கு ஏற்படலாம் என்பதை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.

ஈஸா (அலை)

மக்களிடம் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கருத்தை சொன்னதற்காக அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயற்சி செய்தனர்.

 مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ‌ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்.)

(அல்குர்ஆன் 5 :117-118)

وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ‌ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا‏ بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏

அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இதுகுறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4 :15-158)

நபிகளாரும் நபித்தோழர்களும் சந்தித்த சோதனைகள்

ஓரிறைக் கொள்கையை சொன்னதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இஸ்லாத்தை தழுவியவர்களும் கொடுமையான வார்த்தைகளை கேட்டு மனம் வெந்தது. சில நேரங்களில் கொலை செய்யும் முயன்றனர்.

لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள் உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

(அல்குர்ஆன் 3 : 186)

وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ‏

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.

(அல்குர்ஆன் 15 :97)

நபிகளாரைக் கொல்ல முயற்சி

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏகஇறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

(அல்குர்ஆன் 8 :30)

3678- حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ ، حَدَّثَنَا الْوَلِيدُ ، عَنِ الأَوْزَاعِيِّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ، قَالَ :
سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو عَنْ أَشَدِّ مَا صَنَعَ الْمُشْرِكُونَ بِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ : رَأَيْتُ عُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي فَوَضَعَ رِدَاءَهُ فِي عُنُقِهِ فَخَنَقَهُ بِهِ خَنْقًا شَدِيدًا فَجَاءَ أَبُو بَكْرٍ حَتَّى دَفَعَهُ عَنْهُ فَقَالَ : {أَتَقْتُلُونَ رَجُلاً أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ}.

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ” (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்களை விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, ” “என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிட மிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்” என்று சொன்னார்கள்.

(புகாரி 3678)

ஓரிறைக் கொள்கையை சொன்னதற்காக நபிகளாரைக் கொல்ல பல முயற்சிகள் செய்தும் அல்லாஹ் அவர்களைக் காப்பற்றினான்.

ஏகத்துக் கொள்கையில் இருக்கும் வரை பிரச்சனைகளும் துன்பங்களும் இருக்கும்.

இறுதியில் மாபெரும் வெற்றியை அல்லாஹ் வழங்குவான்.