Tamil Bayan Points

கண் அறுவை சிகிச்சை நடத்திய ரோபோ

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 4, 2016 by Trichy Farook

ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன.
கண் அறுவை சிகிச்சையில் புதிய காலத்தை இந்த அறுவை சிகிச்சை ஏற்படுத்தி இருப்பதாக, ஆக்ஸ்போர்டில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பேராசிரியர் ராபர்ட் மேக்லாரென் தெரிவித்திருக்கிறார்.