Tamil Bayan Points

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 28, 2019 by

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அப்துல் லத்தீப் அஹமது பாட்ஷா (42), அலி பட் (48), மிர்சா நிசார் (39), அப்துல் கனி (57), ரயீஸ் பெக்(56) ஆகியோர் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை 5:19pm மணிக்கு விடுவிக்கப்பட்டனர.

இதில் ரயீஸ் பெக் ஜூன் 8, 1997 முதல் சிறையில் அடைக்கப்பட்டார், மற்றவர்கள் ஜூன் 17, 1996 முதல் ஜூலை 27, 1996 வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சமயத்தில் , அவர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர், ஆனால் 20 ஆண்டுகளில் அவர்கள் ஒருபோதும் பரோல் அல்லது ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால், அரசுத்தரப்பு கொடுக்க இயலவில்லை. இந்த குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டாக்டர் அப்துல் ஹமீதுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிறுவ தவறிவிட்டது என்று கூறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

1997ல் கைது செய்யப்பட்டாலும் இந்த வழக்கின் மீதான விசாரணை 2011ம் ஆண்டில் தான் தொடங்கியது. 23 ஆண்டு வாழ்க்கையை இழந்துவிட்டார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இவர்களது உறவினர்கள். ஆறு பேரில், ரயீஸ் பெக் ஆக்ராவில் வசிப்பவர், மற்ற ஐந்து பேரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களை இந்த வழக்கில் குற்றம் சாட்டும் வரை ஒருவரை ஒருவர் தங்களுக்கு யார் என்று கூட தெரியாது என்று தெரிவித்தனர்.

அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, பட் கம்பள வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். பாட்ஷா டெல்லி மற்றும் காத்மாண்டுவில் காஷ்மீரி கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார்.இதில் நிசார் ஒன்பதாம் வகுப்பு மாணவர், கனி ஒரு பள்ளியை நடத்தி வந்தவர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் எந்த உலகத்திற்குள் அடியெடுத்துவைக்கிறோம் என்றே தெரியவில்லை; நாங்கள் எங்களது உறவினர்களை இழந்துவிட்டோம்; எனது தந்தை மற்றும் தாய், மாமா ஆகியோர் இறந்துவிட்டனர். நாங்கள் சிறையிலிருந்து குற்றமற்றவர்கள் என்று விடுதலையாகிவிட்டோம். ஆனால் சிறையில் இருந்த 23 ஆண்டுகளை எங்களுக்கு யார் திரும்ப தருவார்” என்று ரயீஸ் பெக் எழுப்பிய கேள்விக்கும் எவரிடத்திலும் பதில் இல்லை.

இவ்வாறு ரயீஸ் பேசிக்கொண்டிருக்கையில் இருவர் அவரைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பிக்கிறார்கள். ஒருவர் அவரது மகன் ரிஸ்வான், மற்றவர் அவரது சகோதரர் சலீம். “இத்தனை ஆண்டுகளில் நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை” என்று சலீம் தனது கண்ணீரைத் தடுத்து கொண்டு கூறுகிறார்.

“இந்த வழக்கில் என்னை கைது செய்யும்போது எனக்கு 16 வயது தான்; ஆனால் எனக்கு 19 வயது என்று கூறி என் மீது குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தனர். தற்போது எனக்கு 39 வயது ஆகிறது. ஆனால் சிறையில் இருந்த காலத்தில் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும். இனிமேல் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும்” என்று நிசார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பாட்ஷா என்பவருக்கும் இதே நிலை தான் . இவருக்கும் திருமணம் ஆகவில்லை. அவரது வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, இந்த நிலையில் உள்ள என்னை எந்த பெண் திருமணம் செய்து கொள்வார் என்று வினவினார். அங்கிருந்து அவர்களில் 4 பேர் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் அலுவலகத்திற்கு செல்ல முனைகிறார்கள் ஏனெனில், விடுதலையில் இவர்களே முக்கிய பங்கைக் ஆற்றியவர்கள்.

“அவரது இளமை கடந்துவிட்டது, எங்கள் பெற்றோர் இறந்துவிட்டார்கள், என் கண்ணீர் வறண்டுவிட்டது, அனுதினமும் அவருக்கு அழுது கொண்டே தான் என் நாட்கள் கடந்தன” என்கிறார் ஜம்முவிலிருந்து தொலைபேசியில் பேசும் கனியின் சகோதரி சுரையா (62),. “நேற்று முதல் என் இதயம் வேகமாக துடிக்கிறது. எனக்கு ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுங்கள், அவர் முதலில் வீட்டிற்கு வரட்டும், எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் பிறகு சொல்வேன், ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

சம்லெடி நகர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 2014ல் ஒருவரும், நேற்று 6 பேர் என இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் திகார் சிறையில் உள்ள ஜவீத் கான் மீது லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால் அவர் வெளியேறவில்லை.குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் விடுவிக்கபட்டிருந்தனர் , அதில் ஒருவர் இறந்துவிட்டார்.

டாக்டர் அப்துல் ஹமீதுக்கு மரண தண்டனையும், அப்ரூவராக மாறியதாக கூறப்படும் பப்பு சலீமுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி சபீனா மற்றும் நீதிபதி கோவர்தன் பர்தார் உத்தரவிட்டனர்.

“இறுதியாக அவர்கள் நிரபராதிகள் எனக் கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது அநீதிதான். இந்த அப்பாவி நபர்கள் எந்த தவறும் செய்யாமல் 23 ஆண்டுகள் சிறையில் தங்கள் வாழ்க்கையை இழந்து உள்ளனர் . அதற்கு யார் ஈடுசெய்வார்கள்? நிகழ்ந்துவிட்ட தவறுக்கும் யார் பொறுப்பேற்பார்கள் ? ”என்று ராஜஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் தலைவர் முகமது நாஜிமுதீன் கேள்வி எழுப்பினார்.

Source:http://www.newscap.in/how-six-accused-spent-over-two-decades-in-jail-only-to-be-acquitted-blast-rajasthan-high-court-police-jaipur/