Tamil Bayan Points

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

Last Updated on April 5, 2017 by Trichy Farook

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

பதில்

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால், ஜின்களுக்கென்று தனியாக இறைதூதர்கள் வந்தனர். இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது.

ஜின், மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. “(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்” எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

திருக்குர்ஆன் : 6:130

நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு, நபியவர்களின் குர்ஆனை ஜின்கள் செவியுற்றதாகவும், தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாகவும், குர்ஆன் குறிப்பிடுகிறது, எனவே, நபி(ஸல்) அவர்களே ஜின் இனத்தாருக்கும் நபியாக உள்ளார்கள் என அறியலாம்.

46:29 وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ‌ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا‌ۚ فَلَمَّا قُضِىَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ‏

46:29. மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

 

By Farook