Tamil Bayan Points

சிறுபான்மையினர்கள் மீது தொடரும் ஆதிக்க வெறி

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 4, 2020 by

தொடரும் ஆதிக்க வெறி

இஸ்லாமியர்களுக்கும் , ஏனைய சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர் கல்வி கிடைக்கப்பெற தகுதியற்ற தேசமாக இந்தியா மாறி வருகிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வின் பெயரால் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை சமூகங்களின் மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய அரசு. விளைவு, அனிதா துவங்கி சமீபத்தில் மோனிஷா வரை அதற்கான நிகழ்ந்த தற்கொலைகளின் பட்டியல் நீளம்.

ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர் ரோஹித் விமுலா, தமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வு தேசத்தையே உலுக்கியது.

மும்பையை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி பயல் தத்வி, சாதிய கொடுமையால் விடுதியிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது இந்த ஆண்டின் துவக்கத்தில் தேசத்தை பரபரப்பாக்கியது.

தற்போது, சென்னை ஐஐடி வளாகத்தில், கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி பாத்திமா லத்திஃப் என்பவரும் இதே போன்ற மத ரீதியிலான துன்புறுத்தல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஒரு முஸ்லிம் பெயர் மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்ததை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று, மறைந்த ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் கூறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பார்ப்பன ஆதிக்கம் நிறைந்ததாக இந்தியாவின் முதன்மை கல்வி துறைகள் உருமாறி வருகின்றன என்பதையே அத்தனை (தற்)கொலைகளும் நமக்கு உணர்த்துகின்றன..!

Source: unarvu (29/11/2019)