Tamil Bayan Points

நமக்கு உணவளிக்கும் பிற மதத்தவருக்கு துஆ செய்வது எப்படி?

கேள்வி-பதில்: உணவு

Last Updated on October 23, 2016 by Trichy Farook

பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்?

பதில்

உணவளித்தவர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்.

(பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக.

நூல்: முஸ்லிம் 3805

இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடுவதற்குத் தடை உள்ளது என்பதால் இந்தப் பிரார்த்தனையை மாற்று மதத்தவர்களுக்குச் செய்ய முடியாது. அவர்களுக்கு பரக்கத் ஏற்படவும், நேர்வழிக்காகவும் பிரார்த்திக்கலாம்.