Tamil Bayan Points

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள், தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 2, 2019 by

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள்,தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள்

உலகின் பல தொழில் துறைகளில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு அச்சாணியாக பனூ மூஸா சகோதரர்களின் க ண் டு பி டி ப் பு க ள் விளங்குகின்றன. ஜாஃபர் முஹம்மத், அஹ்மத், அல் ஹஸன் ஆகிய மூவரும் பனூ மூஸா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். 800ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிறந்த இவர்கள் கணித துறையில் கிரேக்கர்களின் ஆக்கங்களை அரபுலகத்திற்கு அறிமுகம் செய்து, அதை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுத்தவர்கள். மூவரில் மூத்தவரான ஜாஃபர் முஹம்மத், வடிவியல் (Geometry) மற்றும் வானியல் (Astronomy) துறையில் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

இரண்டாமவரான அஹ்மத், இயக்கவியல் ((Mechanics) துறையில் கைதேர்ந்தவராக இருந்தார். மூன்றாமவரான அல் ஹஸன், வடிவியல் துறையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவர்களின் ஆய்களில் மிகவும் பிரபலமானது ‘கிதாப் மரிஃபத் மசகத் அல்-அஷ்கல் ‘(The Book of Measurement of Plane and Spherical Figures) ஆகும். பரப்பளவையும், பரும அளவையும் எண்களாக கணக்கிடும் முறை கிரேக்கர் களிடம் இல்லாமல் இருந்தது. இதை மாற்றி அமைத்து பரப்பளவிற்கும், பருமளவிற்கும் எண்களை தொடர்புபடுத்த கூடிய வழிமுறையை பனூ மூஸா சகோதரர்கள் வகுத்தனர்.

உதாரணமாக, ‘π’ எனும் கணித குறியீட்டை வட்டத்தின் விட்டத்தோடு பெருக்கும் போது, சுற்றளவின் மதிப்பீடு கிடைக்கும் என்பதை கண்டுபிடித்து விளக்கினார்கள். வடிவியலின் செயல் பாடுகளை (Operations of Geometry) கணக்கிடக்கூடிய முறையையும் முதன்முதலாக கண்டுபிடித்தனர். வடிவியலின் சான்றுகள் அடிப்படையில், வடிவியல் பொருள்கள் எவ்வாறு நகரும் என்பதை கணித உலகிற்கு அறிமுகப்படுத்தினர். மேலும், கணித உலகில் நீண்டகால சிக்கலாக பார்க்கப்பட்ட, கோணத்தை எவ்வாறு முறுக்குவது (Trisecting an Angle)) என்பதை, இயக்கவியல் முறைகள் (Kinematic Methods) மூலம் தீர்வு கண்டனர்.

வடக்கு மெசோப்போடாமிய பாலை வனத்தில், அட்சரேகையின் பாகையை (Degree of Latitude)) அளவிடும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். சூரியனையும், சந்திரனையும் பல கோணங்களில் பாக் தாத் பகுதியிலிருந்து கண் காணித்தனர். முஹம்மத் ஜாஃபர் மற்றும் அஹ்மத் ஆகிய இரு சகோதரர்களும், ஒரு ஆண்டின் நீளம் என்பது 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம் என்று கண்டுபிடித்தனர். நீரின் இயக்கத்தை அணிதிரட்டி பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி, தானியங்கி சுழலை (Automatic Crank) கண்டுபிடித்தனர்.

இன்றைய கார்களில் பயன்படுத்தப்படும், சுழற்றித்தண்டு (Crank Shaft)) என்ற கருவியை போன்ற தானியங்கி சுழலை, அன்றே பனூ மூஸா சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது வீடுகளிலுள்ள குளியலறை, சமையலறை போன்றவைகளில் பயன் படுத்தப்படும் குழாய்களில், தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய கூம்பு வடிவிலான அடைப்பானை (Valve), பனூ மூஸா சகோதரர்கள் கண்டுபிடித்து நீரை சேமிக்கக்கூடிய முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தினார்கள்.

இன்றைய உலகில் பெரிய கட்டிடங்களை இடிப்பதற்கும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கும், தூர்வாரும் மண்ணை அள்ளுவதற்கும் jcb வண்டிகள் பயன்படுகின்றன. அந்த வண்டிகளில் பொருத்தப் பட்டுள்ள (Digger) எனும் கருவி பொருட்களை அள்ளுவதற்கு பயன்படுகிறது. பனூ மூஸா சகோதரர்கள் இது போன்ற ஒரு கருவியை பல நூறு ஆண்டுகளுக்கு கண்டுபிடித்தனர். அதன் மூலம் கால்வாய்களில் தண்ணீரின் ஆழத்தில் உள்ள பொருட்களை அள்ளுவதற்கு அது பயன்படுத்தப்பட்டது. இன்றைய தொழில்நுட்ப ரீதியிலான பல வேலைகளுக்கு பனூ மூஸா சகோதரர்களின் கண்டு பிடிப்புகள் அளப்பரியதாக உள்ளது.

Source: unarvu (26/07/29)