Tamil Bayan Points

என்னுரை

முக்கிய குறிப்புகள்: அறிமுகம்

Last Updated on April 29, 2024 by Trichy Farook

அன்பிற்குரிய கொள்கை சகோதரர்களே!

இஸ்லாமிய அழைப்பாளர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் எவ்வளவு அனுபவம் உடையவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் வேலைப் பளுவின் காரணமாக குறிப்புகளை எடுக்க இயலாமல் போய் விடும்.

சில நேரங்களில் நேரம் ஒதுக்கி குறிப்புகள் எடுத்துச் சென்றாலும், இறுதி நேரத்தில் தலைப்புகள் மாற்றப்பட்டு விடும். இன்னும் சில வேளைகளில், திடீரென தலைப்பு தரப்படும், பேசச் சொல்வார்கள். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவது என்று நினைவிற்கு வராது. இது போன்ற பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே பயான் குறிப்புகள் என்னும் இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளது.

அதுபோன்று, புதிதாக பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பவர்கள் குறிப்புகளை தேடி எடுக்க சிரமப்படுவார்கள். சரியற்ற முறையில் குறிப்புகள் எடுத்து பேசிவிட்டு வரும் போது, நமது நோக்கம் சரியாக நிறைவேறாது. எனவே, புதிய இளம் தாயிக்களின் வேலையை எளிதாக்கும் பொருட்டும், இதில் ஏராளமான தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • இன்னும் பல நூறு தலைப்புகள் விரைவில், அடுத்த பதிப்பில் சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
  • அனைத்து குர்ஆன், ஹதீஸ்களுக்கும் அரபி மூலம் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


பெரிய அரபி எழுத்துக்கள் (JUMMA MODE)

பயான் குறிப்புகளின் இடையே வரும் அரபி வாசகங்கள் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு உரையில் வரும் அனைத்து ஹதீஸ்களையும் மனனம் செய்ய இயலாது. எனவே, உரை நிகழ்த்தும் போது, அரபி வாசகங்களை பார்த்துக்கொண்டே பேசுவதற்கு வசதியாக, இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

தேடுதல் வசதி (Search)

இந்த செயலியில் தேடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. தேடுவது குறித்த உதவிக் குறிப்பை அடுத்த தலைப்பில் காணவும்.

எழுத்துக்களை பெரிதாக்க, சிறிதாக்க (Font +/-)

ஆரம்ப பக்கம் முதற்கொண்டு, அனைத்து பக்கங்களிலும் இதில் உள்ள எழுத்துக்களை பெரிதாக்க, சிறிதாக்க முடியும். மேலும் பின்பக்க கலரை மாற்றவும் முடியும். NightMode வசதியும் உள்ளது.

கடைசியாக படித்ததை மீண்டும் படிக்க (LAST READ)

இரண்டு மாதங்களுக்கு பிறகு திறந்தாலும், கடைசியாக படித்த வரியிலிருந்து தொடர்ந்து படிப்பதற்காக,  LAST READ என்ற வசதி செய்யப்பட்டு உள்ளது.

மற்ற வசதிகள்

பெரிய கட்டுரைகளை எளிதாக படிக்க, AutoRun, தானாக ஓடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்படும் வசதிகள் அடுத்தடுத்த பதிப்புகளில் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

தவறுகள் இருந்தால்

இந்த செயலியில் உள்ள கட்டுரைகளில் தவறுகள், பலவீனமான செய்திகள் ஏதேனும் இருந்தால், உடனே எனக்கு வாட்ஸ்அப் (9842470497) அனுப்புங்கள்.  இந்த ஆப்(செயலி) எப்போது வேண்டுமானாலும் அப்டேட் Google-PlayStore-க்கு சென்று அப்டேட் செய்து கொள்ளமுடியும். நிரந்தர நன்மை தரும், இந்த பணியில் எனக்கு உதவ விரும்பினால் எங்களை ([email protected]) தொடர்பு கொள்ளவும். 

இதில் உள்ள கட்டுரைகள், கேள்விபதில்கள், ஆய்வுகள், ஆக்கங்கள் அனைத்தும் அதனதன் ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உரியது. இதில் எனது உழைப்பு ஒரு சதவீதத்தை விட குறைவு தான். ஆகவே, அவர்களுக்காகவும், எனக்காகவும் இறைவனிடத்தில் இம்மை, மறுமை வெற்றிக்காக துஆச் செய்யுங்கள். 

இறைவனின் மன்னிப்பும், சுவர்க்கமும் மட்டுமே நமது இலக்கு. ஸலாம்.

M.G.Farook.
Singarathope. Trichy.