Tamil Bayan Points

மனைவியின் பங்கு

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

Last Updated on February 17, 2022 by Trichy Farook

1 . இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால், மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும்

2 . இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால், மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் தர வேண்டும்.

وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ (12)4

உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம்,கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).

அல்குர்ஆன் (4 : 12)

ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால்,

ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், மனைவிக்கு உள்ள பங்கை அவர்களிடையே சமமான அளவில் பிரித்துக் கொள்ளவேண்டும்.