Tamil Bayan Points

மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

Last Updated on February 9, 2021 by Trichy Farook

மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன?

மனைவி மாதவிடாய் நிலையில் இருக்கும்போது கணவன் அவளுடன் உடலுறவு கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். மாதவிடாய் ஏற்பட்டுள்ள காலத்தில் மனைவியுடன் கணவன் உறவுகொண்டுவிட்டால் இந்தப் பாவத்திற்கு பரிகாரமாக ஒரு தீனார் அல்லது அரை தீனாரை தர்மம் செய்ய வேண்டும் என்று பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

287أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ عَنْ مُقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّجُلِ يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ رواه النسائي

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : நஸாயீ (287)

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாதவிடாய் நேரத்தில் உறவுகொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று நாமும் இதற்கு முன்பு கூறினோம்.

இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் இரண்டு விதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் பெரும்பாலான அறிவிப்புகள் ஒரு விதத்தில் சீராக அறிவிக்கப்படாமல், ஒன்றுக்கொன்று வேறுபட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணத்தால் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலைவுகின்றது.

இது நபிகளாரின் கூற்றாக இருக்க முடியாது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே சரியான கருத்து என்று நவவீ, பைஹகீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.

ஹாகிம், அபுல் ஹசன் பின் கத்தான், அபூதாவுத், அஹ்மது, இப்னு தகீகில் ஈத் ஆகியோர் நபிகளார் கூறியதாக வரும் அறிவிப்பு சரியானது என்று கூறியுள்ளனர். எனவே இவ்விசயத்தில் எது சரியான கருத்து என்பதை தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

தற்போது நாம் மறு ஆய்வு செய்த வகையில் இது நபி (ஸல்) அவர்களின் கூற்று என்பது சரியான கருத்தாகும். எனவே இதற்கு முன்பு நாம் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு செய்திக்கு ஒரு அறிவிப்பாளர் தொடர் இருந்து அறிவிப்பாளர்கள் அந்த அறிவிப்பாளர் தொடரை சீரான ஒரு முறையில் அறிவிக்காமல் ஒன்று மற்றொன்றுக்கு மாற்றமாக இருக்கும் வகையில் அறிவித்தால் இவற்றில் எந்த அறிவிப்பாளர் தொடர் சரியானது என்ற குழப்பம் வரும். இத்துடன் அறிவிக்கப்படும் தகவல்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒன்று மற்றொன்றுக்கு மாற்றமாக இருந்தால் அப்போதும் அந்தத் தகவல்களில் எது சரியானது என்ற குழப்பம் வரும்.

இதுபோன்ற நேரங்களில் எது மிகச்சரியான அறிவிப்பு என்று ஆராய வேண்டும். இருப்பவற்றில் மிகச் சரியான அறிவிப்பபைக் கண்டுபிடிக்க முடிந்தால் அந்தச் சரியான அறிவிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். எது சரியானது என்பதை முடிவெடுக்க முடியாத அளவுக்கு அனைத்தும் தரத்தில் சமமாக இருந்தால் அப்போது எந்த அறிவிப்பையும் எடுக்காமல் அனைத்து அறிவிப்புக்களையும் நிராகரிக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வரும் அறிவிப்புகளில் பெரும்பாலானவை பலவீனமாக இருக்கின்றது. சில அறிவிப்புகள் மாத்திரம் சரியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அறிவிப்புகளில் குழப்பம் இருக்கின்றது எனக் கூறுபவர்கள் பலவீனமான மற்றும் சரியான ஒட்டுமொத்த அறிவிப்பாளர் தொடர்களையும் கவனித்து பொத்தாம் பொதுவாக இவ்வாறு கூறுகின்றனர். பலவீனமான அறிவிப்புக்களில் ஒன்று மற்றொன்றுக்கு மாற்றமாக இருப்பதையும் கவனித்து இவ்வாறு கூறுகின்றனர். எனவே இதை நாம் ஏற்க முடியாது.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் கூற்று எனக் கூறுபவர்கள் இதற்கு பலவீனமான அறிவிப்புகளைக் காட்டாமல் குழப்பம் இல்லாத சரியான அறிவிப்பாளர் தொடரை ஆதாரமாகக் காட்டுகின்றனர். எனவே இது சரியான முடிவாகும்.

பலவீனமான அறிவிப்புக்களை ஒதுக்கிவிட்டு சரியான அறிவிப்பாளர் தொடர்களை மாத்திரம் கவனித்தால் எந்தக் குழப்பமும் முரண்பாடும் இல்லாமல் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுதான் என்பதை தெளிவாக அறியலாம்.

இந்த அறிவிப்புக்களை ஒவ்வொன்றாக இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ள இருக்கின்றோம். முதலில் பலவீனமான அறிவிப்புக்களை அறிந்து கொள்வோம்.

பலவீனமான அறிவிப்புகள்

அப்துல் கரீம் அபூ உமைய்யாவின் அறிவிப்பு

217 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ أَبِي حَمْزَةَ السُّكَّرِيِّ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَ دَمًا أَحْمَرَ فَدِينَارٌ وَإِذَا كَانَ دَمًا أَصْفَرَ فَنِصْفُ دِينَارٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْكَفَّارَةِ فِي إِتْيَانِ الْحَائِضِ قَدْ رُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا وَمَرْفُوعًا وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ قَالَ ابْنُ الْمُبَارَكِ يَسْتَغْفِرُ رَبَّهُ وَلَا كَفَّارَةَ عَلَيْهِ وَقَدْ رُوِيَ نَحْوُ قَوْلِ ابْنِ الْمُبَارَكِ عَنْ بَعْضِ التَّابِعِينَ مِنْهُمْ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَهُوَ قَوْلُ عَامَّةِ عُلَمَاءِ الْأَمْصَارِ رواه الترمذي

இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் என்பாரும் மிக்சம் என்பாரிடமிருந்து அப்துல் கரீம் பின் அபில் மகாரிக் என்பாரும் அறிவிக்கிறார்கள். இது நபியின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கரீம் பின் அபில் மகாரிக் பலவீனமானவர் ஆவார். இப்னுல் ஜவ்ஸீ, பைஹகீ, தஹாவீ, உகைலீ, அபூஹாதிம் ராஸி, அபூஹாதிம், இப்னு ஹிப்பான், அபூ சுர்ஆ, அஹ்மது பின் ஹம்பள், இப்னு ஹஜர், இப்னு திஹ்யா, இப்னு அப்தில் பர், தாரகுத்னீ, யஹ்யா பின் மயீன் உட்பட பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று ஒன்றுபட்டு கூறியுள்ளனர்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 377)

குஸைஃப் என்பாரின் அறிவிப்பு

126 حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ خُصَيْفٍ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّجُلِ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ رواه الترمذي

இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் என்பவரும் மிக்சம் என்பவரிடமிருந்து குஸைஃப் என்பவரும் அறிவிக்கிறார்கள். இதுவும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வரும் குஸைஃப் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவர் வலிமையானவர் இல்லை என்று ஹாகிம் கூறியுள்ளார். அஸ்தீ, பைஹகீ, உகைலீ, அபூஹாதிம் ராஸி, இப்னு ஹிப்பான், அஹ்மது பின் ஹம்பள், நஸாயீ, இப்னு ஹஜர், தஹபீ, இப்னு குஸைமா, யஹ்யா பின் சயீத் ஆகியோர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமானது.

யஃகூப் பின் அதாஉ

سنن الدارقطني – كتاب النكاح – باب المهر – حديث : ‏ ‏4826

نا عبد الله بن أحمد بن ثابت , نا العباس بن محمد , نا أحمد بن يونس , نا أبو بكر بن عياش , عن يعقوب بن عطاء , عن مقسم , عن ابن عباس , قال : قال رسول الله صلى الله عليه وسلم في الذي يقع على امرأته وهي حائض , قال : ” يتصدق بدينار أو بنصف دينار ” *

இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் என்பாரும் மிக்சமிடமிருந்து யஃகூப் பின் அதாவும் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. யஃகூப் பின் அதாஉ பலவீனமானவர் ஆவார். பைஹகீ, அபூஹாதிம் ராஸி, அபூ சுர்ஆ, அஹ்மது பின் ஹம்பள், இப்னு ஹஜர், தஹபீ, யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

தர்தீபுத் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 393)

மதருல் வர்ராக்

المعجم الكبير للطبراني – من اسمه عبد الله

وما أسند عبد الله بن عباس رضي الله عنهما – مقسم عن ابن عباس

حديث : ‏ 4826

حدثنا أبو عوانة يعقوب بن إسحاق النيسابوري ، ثنا أحمد بن حفص ، ثنا أبي ، ثنا إبراهيم بن طهمان ، عن مطر الوراق ، عن الحكم ، عن مقسم ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم في الذي يقع على امرأته وهي حائض : ” يتصدق بدينار أو نصف دينار ” *

இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் அறிவிப்பதாகவும் மிக்சமிடமிருந்து ஹகம் அறிவிப்பதாகவும் ஹகமிடமிருந்து மதருல் வர்ராக் அறிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் மதருல் வர்ராக என்பவர் நம்பகமானவர் என்றாலும் சரியான நினைவாற்றல் உள்ளவர் இல்லை என்பதால் இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.

அலீ பின் பதீமா

فضائل الصلاة للفضل بن دكين – باب الرجل يجامع امرأته وهي حائض

حديث : ‏7‏15886

حدثنا سفيان ، عن علي بن بذيمة ، عن مقسم ، عن النبي صلى الله عليه وسلم ، في الذي يقع على امرأته وهي حائض ، قال : ” نصف دينار ” . حدثنا سفيان ، عن خصيف ، عن مقسم ، عن النبي صلى الله عليه وسلم . حدثنا سفيان ، عن ابن أبي ليلى ، عن عطاء ، عن ابن عباس ، قال : دينار ” *

நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பில் சுப்யான் முதல் அறிவிப்பாளராக இடம்பெறுகிறார். இந்த அறிவிப்பில் சுப்யான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து மிக்சம் என்பவரும் மிக்சம் என்பாரிடமிருந்து அலீ பின் பதீமா அறிவிப்பதாகவும் அலீ பின் பதீமாவிடமிருந்து சுப்யான் அறிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்களா? அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இந்த இரண்டில் எதையும் முடிவு செய்ய முடியாத அளவுக்கு நபித்தோழரை போக்கி சுப்யான் முர்சலாக அறிவித்துள்ளார். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாஉ பின் அபீ ரபாஹ்

السنن الكبرى للبيهقي – كتاب الطهارة كتاب الحيض – باب ما روي في كفارة من أتى امرأته حائضا حديث : ‏1418‏4826 أخبرناه أبو بكر أحمد بن الحسن القاضي وأبو سعيد بن أبي عمرو قالا : حدثنا أبو العباس محم بن يعقوب ، ثنا محمد بن إسحاق الصغاني ثنا أبو الجواب ثنا سفيان الثوري ، عن ابن جريج ، عن عطاء ، عن ابن عباس ، في الرجل يأتي امرأته وهي حائض قال : ” إن أتاها في الدم تصدق بدينار وإن أتاها في غير الدم تصدق بنصف دينار ” قال الإمام أحمد رحمه الله تعالى : وروى عبد الرزاق عن ابن جريج عن عطاء قال : ليس عليه إلا أن يستغفر الله تعالى والمشهور عن ابن جريج عن عبد الكريم أبي أمية عن مقسم عن ابن عباس كما تقدم والله أعلم *

இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அதாஉ அறிவிப்பதாகவும் அதாவு பின் அபீ ரபாஹிடமிருந்து இப்னு ஜுரைஜ் அறிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கே மிக்சம் இடம்பெறவில்லை.

அதாவும் இப்னு ஜுரைஜ் இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை செய்யக்கூடியவர்கள். இவர்களைப் போன்றவர்கள் நான் கேட்டேன் என்பது போன்ற நேரடியாக செவியுற்றதைத் தெரிவிக்கும் வாசகங்களைக் கூறினால்தான் இவர்களின் அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் இந்த அறிவிப்பில் இவ்விருவரும் தாங்கள் நேரடியாகக் கேட்டதைத் தெரிவிக்கவில்லை.

மேலும் மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டால் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுவதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை என அதாவு கூறியதாக இப்னு ஜுரைஜ் அறிவித்த ஒரு அறிவிப்பும் உள்ளது. எனவே இந்த அறிவிப்பு பலவீனமானதும் குழப்பம் நிறைந்ததாகவும் உள்ளது.

அதாஉல் அத்தார்

السنن الكبرى للبيهقي – كتاب الطهارة كتاب الحيض – باب ما روي في كفارة من أتى امرأته حائضا

حديث : ‏1417‏4826 أخبرنا أبو عبد الله الحافظ ثنا أبو بكر بن إسحاق ثنا محمد بن أيوب ثنا محمد بن المنهال ثنا يزيد بن زريع ثنا عطاء العطار ، عن عكرمة ، عن ابن عباس ، عن النبي صلى الله عليه وسلم في الذي يأتي امرأته وهي حائض ” يتصدق بدينار وإن لم يجد فنصف دينار ” عطاء هو ابن عجلان ضعيف متروك وقد قيل عنه عن عطاء وعكرمة عن ابن عباس وليس بشيء وروي عن عطاء وعكرمة أنهما قالا : لا شيء عليه يستغفر الله أخبرنا أبو عبد الله الحافظ قال أبو بكر أحمد بن إسحاق الفقيه : جملة هذه الأخبار مرفوعها وموقوفها يرجع إلى عطاء العطار وعبد الحميد وعبد الكريم أبي أمية وفيهم نظر قال الشيخ : وقد قيل عن ابن جريج عطاء عن ابن عباس موقوفا وإن كان محفوظا فهو من قول ابن عباس يصح *

நபியின் கூற்றாக வரும் இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா அறிவிக்கின்றார். இக்ரிமாவிடமிருந்து அதாஉல் அத்தார் என்பவர் அறிவிக்கின்றார் எனக் கூறப்பட்டுள்ளது. அதாஉல் அத்தார் பெரும் பொய்யர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 209)

அவ்ஸாயீ

1090 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ قَالَ كَانَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ امْرَأَةٌ تَكْرَهُ الْجِمَاعَ فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَهَا اعْتَلَّتْ عَلَيْهِ بِالْحَيْضِ فَوَقَعَ عَلَيْهَا فَإِذَا هِيَ صَادِقَةٌ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِخُمُسَيْ دِينَارٍ الدارمي

அப்துல் ஹமீத் பின் ஸைத் பின் கத்தாப் கூறுகிறார் : உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மனைவி இருந்தார். அவர் உடலுறவு கொள்வதை வெறுத்து வந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருடன் உடலுறவு கொள்ள நாடும் போதெல்லாம் தனக்கு மாதவிடாய் வந்திருப்பதாக காரணம் கூறிக்கொண்டே இருந்தார். எனவே உமர் (ரலி) அவர்கள் (அவள் பொய் சொல்கிறாள் என்று நினைத்து) அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது உடலுறவு கொண்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது ஒரு தீனாரில் ஐந்தில் இரண்டு பகுதியை தர்மம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள். நூல் : தாரமீ (1090)

இந்தச் செய்தியை அறவிக்கும் அப்துல் ஹமீத் என்பவர் நபித்தோழர் அல்ல. இவருக்குப் பிறகு குறைந்தது இரண்டு அறிவிப்பாளர்கள் இந்த செய்தியில் விடுபட்டிருக்கிறார்கள். எனவே இது முஃளல் என்ற பலவீனமான செய்தியைச் சார்ந்தது.

சரியான அறிவிப்புகள்

ஷக்ஃபாவின் அறிவிப்பு

287أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ عَنْ مُقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّجُلِ يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ رواه النسائي

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : நஸாயீ (287)

நபி (ஸல்) அவர்கள்

இப்னு அப்பாஸ்

மிக்சம்

அப்துல் ஹமீத்

ஹகம்

ஷுஃபா

இந்தச் செய்தி மேற்கண்ட நபர்கள் வழியாக வந்துள்ளது. இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லை. இது சரியான அறிவிப்பாளர் தொடர் என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் இல்லை.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றா? என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.

ஷுஃபாவின் மாணவர்களில் யஹ்யா பின் சயீத், முஹம்மது பின் ஜஃபர், இப்னு அபீ அதீ, வஹப் பின் ஜரீர், சயீத் பின் ஆமிர், நள்ர் பின் ஷுமைல், அப்துல் வஹ்ஹாப் பின் அதாஃ ஆகியோர் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர்.

ஷுஃபாவின் மாணவர்களில் அஃப்பான் பின் முஸ்லிம், சுலைமான் பின் ஹர்ப், முஸ்லிம் பின் இப்ராஹீம், ஹஃப்ஸ் பின் உமர், ஹஜ்ஜாஜ் பின் மின்ஹால் மற்றும் பலர் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர்.

இந்த வேறுபாட்டின் காரணமாக ஷுஃபாவின் அறிவிப்பும் குழப்பமானது என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இதை எடுக்காமல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே சரி என பலர் கூறியுள்ளனர்.

ஆனால் ஷுஃபாவின் அறிவிப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. இந்தச் செய்தியை ஷுஃபாவிற்கு அறிவித்த ஷுஃபாவின் ஆசிரியர் ஹகம் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் இரண்டு விதங்களில் அறிவித்துள்ளார். எனவே ஷுஃபா தனது மாணவர்களில் சிலருக்கு இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், சிலருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் அறிவித்துள்ளார்.

இரண்டும் சரியான தகவல்தான். நபி (ஸல்) அவர்கள் கூறிய எத்தனையோ செய்திகள் நபித்தோழர்களின் கூற்றாகவும் ஆதாரப்பூர்வமாக நமக்கு வந்துள்ளது. இதனால் குழம்ப வேண்டியதில்லை.

علل الحديث لابن أبي حاتم – (1 / 51(

ومِنهُم من يروِي عن مِقسمٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم مُرسلا.

وأمّا مِن حدِيثِ شُعبة ، فإِنّ يحيى بن سعِيدٍ أسندهُ ، وحُكِي أنَّ شُعبة ، قال : أسندهُ لِي الحكمُ مرّةً ، ووقفهُ مرّةً.

ஹகம் ஒரு முறை என்னிடத்தில் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் இன்னொரு முறை இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் தெரிவித்தார் என ஷுஃபா கூறினார்.

நூல் : இலலுல் ஹதீஸ் (பாகம் 1 பக்கம் 51)

ஷுஃபா இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது நபியின் கூற்றா? நபித்தோழரின் கூற்றா? என்ற பிரச்சனை ஷுஃபாவின் காலத்திலலேயே ஏற்பட்டுள்ளது. அதற்கு ஷுஃபா நான் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவே மனனம் செய்துள்ளேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

1087أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ فِي الَّذِي يَغْشَى امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ شُعْبَةُ أَمَّا حِفْظِي فَهُوَ مَرْفُوعٌ وَأَمَّا فُلَانٌ وَفُلَانٌ فَقَالَا غَيْرُ مَرْفُوعٍ . . .رواه الدارمي

இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவே மனனம் செய்துள்ளேன். ஆனால் இன்னார் இன்னார் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல என்று கூறுகின்றனர் என்று ஷுஃபா கூறினார்.

நூல் : தாரமீ (1087)

எனவே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் ஷுஃபாவின் அறிவிப்பு சரியானதுதான். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

ஷுஃபா ஆரம்பத்தில் இது நபியின் கூற்று என்ற கருத்தில் இருந்ததாகவும் பின்னர் இதிலிருந்து மாறி இது நபித்தோழரின் கூற்று என்பதே சரி எனக் கூறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது சரியான கூற்றல்ல.

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي – (1 / 315(

1569- وَقَدْ بَيَّنَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ شُعْبَةَ أَنَّهُ رَجَعَ عَنْ رَفْعِهِ بَعْدَ مَا كَانَ يَرْفَعُهُ أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ أَخْبَرَنَا أَبُو بَكْرٍ : مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بَالَوَيْهِ مِنْ أَصْلِ كِتَابِهِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ يَعْنِى ابْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ فِى الَّذِى يَأْتِى امْرَأَتَهُ وَهِىَ حَائِضٌ فَذَكَرَهُ مَوْقُوفًا. قَالَ ابْنُ مَهْدِىٍّ فَقِيلَ لِشُعْبَةَ : إِنَّكَ كُنْتَ تَرْفَعُهُ. قَالَ : إِنِّى كُنْتُ مَجْنُونًا فَصَحَحْتُ. فَقَدْ رَجَعَ شُعْبَةُ عَنْ رَفْعِ الْحَدِيثِ وَجَعَلَهُ مِنْ قَوْلِ ابْنِ عَبَّاسٍ.

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ கூறுகிறார் : தன் மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது உடலுறவு கொண்டவர் விசயத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஷுஃபா எங்களுக்கு அறிவித்தார். அப்போது ஷுஃபாவிடத்தில் நீங்கள் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகக் கூறினீர்களே என்று கேட்கப்பட்டது. அதற்கு ஷுஃபா நான் பைத்தியமாக இருந்தபோது அது சரி என்று கூறினேன் என்று கூறினார்.

நூல் : பைஹகீ (பாகம் 1 பக்கம் 315)

இது நபிகளாரின் கூற்றாக இருக்கும்போது பலர் இதை மறுத்ததால் ஷுஃபா இந்த ஹதீஸை அறிவிக்க தான் விரும்பவில்லை என்பதை முன்பு கூறினார் என்பதைப் பார்த்தோம். தான் சொல்வதைக் கேட்காமல் எதிர்வாதம் புரிபவர்களிடத்தில் பதிலுக்கு பதில் பேசக்கூடியவராக ஷுஃபா இல்லை. மாறாக பிரச்சனையை விட்டும் ஒதுங்கக்கூடியவராகவே இருந்துள்ளார்.

இந்த அடிப்படையில் தான் ஷுஃபா கோபப்பட்டு மேற்கண்ட வாசகத்தை கூறியுள்ளார். தன்னை பைத்தியம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். சிறந்த மனனத்தன்மை கொண்ட ஷுஃபா தன்னை பைத்தியம் என்று சொல்கிறார் என்றால் இது கோபத்தில் கூறிய வார்த்தை என்பதை அறிய முடிகின்றது.

எனவே ஷுஃபா தர்கிப்பதைத் தவிர்ப்பதற்காக கோபத்தில் கூறிய இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நபிகளார் கூறியதாக அவர் அறிவித்த அறிவிப்பை நாம் நிராகரிக்க முடியாது. எனவே தாம் அஹ்மது பின் ஹம்பள் மற்றும் அபூதாவுத் ஆகிய இருவரும் ஷுஃபாவின் இந்த குறிப்பிட்ட அறிவிப்பிற்கு மட்டும் சரியானது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير – (1 / 429(

وَقَالَ الْخَلَّالُ عَنْ أَبِي دَاوُد عَنْ أَحْمَدَ مَا أَحْسَنَ حَدِيثَ عَبْدِ الْحَمِيدِ فَقِيلَ لَهُ تَذْهَبُ إلَيْهِ قَالَ نَعَمْ

وَقَالَ أَبُو دَاوُد: هِيَ الرِّوَايَةُ الصَّحِيحَةُ وَرُبَّمَا لَمْ يَرْفَعْهُ شُعْبَةُ

அப்துல் ஹமீதுடைய அறிவிப்பு நன்றாக அமைந்துள்ளது என்று அஹ்மது கூறினார்கள். அந்த அறிவிப்பை நீங்கள் ஏற்கின்றீர்களா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அஹ்மது ஆம் என்றார்கள்.

தல்கீசுல் கபீர் (பாகம் 1 பக்கம் 429)

230حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ وَرُبَّمَا لَمْ يَرْفَعْهُ شُعْبَةُ رواه أبو داود

ஷுஃபாவின் இந்த அறிவிப்பு தான் சரியானதாகும். ஷுஃபா சில நேரங்களில் இதை நபித்தோழரின் கூற்றாகவும் அறிவித்துள்ளார் என்று அபூதாவுத் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (230)

அறிவிப்பாளர் ஹகமிடமிருந்து நபியின் கூற்றாக ஷுஃபா மட்டும் அறிவிக்கவில்லை. கதாதா பின் தஆமா, அம்ர் பின் கைஸ் ஆகிய இரு நம்பகமானவர்களும் இதை நபியின் கூற்றாக அறிவித்துள்ளனர்.

கதாதா பின் தஆமா

2015 حَدَّثَنِي يَزِيدُ أَخْبَرَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ وَرَوَاهُ عَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ مِثْلَهُ بِإِسْنَادِهِ رواه أحمد

இந்த அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் என்பாரும் மிக்சமிடமிருந்து கதாதா என்பாரும் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் கதாதா தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை செய்யக்கூடியவர் ஆவார். இவர் இந்த அறிவிப்பில் தான் மிக்சமிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக சொல்லவில்லை.

ஷுஃபாவுடை அறிவிப்பில் வரும் அதே ஆட்கள் வழியாகவே கதாதாவும் இந்த ஹதீஸைக் கேட்டுள்ளார். ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் அறிவிப்பாளர் தொடர் சுருக்கி கூறப்பட்டுள்ளது. அதாவது

நபி (ஸல்) அவர்கள்

இப்னு அப்பாஸ் (ரலி)

மிக்சம்

அப்துல் ஹமீது

ஹகம்

கதாதா

இந்த அறிவிப்பாளர் வரிசைப்படியே கதாதா இந்த நபிமொழியைக் கேட்டுள்ளார். கதாதாவிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் வேறு அறிவிப்பாளர் தங்களுடைய அறிவிப்புகளில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

السنن الكبرى للنسائي – كتاب عشرة النساء

ذكر الاختلاف على قتادة فيه – حديث : ‏8820‏4826

أخبرنا أبو عاصم خشيش بن أصرم النسائي قال : حدثنا روح ، وعبد الله بن بكر ، قالا : حدثنا ابن أبي عروبة ، عن قتادة ، عن عبد الحميد ، عن مقسم ، عن ابن عباس ، أن رجلا ، غشي امرأته وهي حائض فأمره النبي صلى الله عليه وسلم أن ” يتصدق بدينار ، أو بنصف دينار

இந்த அறிவிப்பு பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி)

மிக்சம்

அப்துல் ஹமீது

கதாதா

ஹம்மாத் பின் ஜஅத் என்பவருடைய அறிவிப்பில் ஷுஃபாவின் அறிவிப்பில் வரும் அனைத்து நபர்களும் இடம்பெற்றுள்ளனர். அதாவது பின்வருமாறு அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள்

இப்னு அப்பாஸ் (ரலி)

மிக்சம்

அப்துல் ஹமீத்

ஹகம்

கதாதா

كتاب الحيض – باب ما روي في كفارة من أتى امرأته حائضا

حديث : ‏1407‏4826

أخبرنا أبو الحسن علي بن أحمد بن عبدان أنا أحمد بن عبيد الصفار ثنا إسماعيل القاضي ثنا هدبة بن خالد ثنا حماد بن الجعد ثنا قتادة ، حدثني الحكم بن عتيبة ، أن عبد الحميد بن عبد الرحمن حدثه أن مقسما حدثه عن ابن عباس ، أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فزعم أنه أتى يعني امرأته وهي حائض فأمره نبي الله صلى الله عليه وسلم أن يتصدق بدينار فإن لم يجد فنصف دينار ” كذا رواه حماد بن الجعد عن قتادة عن الحكم مرفوعا وفي رواية شعبة عن الحكم دلالة على أن ذلك موقوف وكذلك رواه أبو عبد الله الشقري موقوفا إلا أنه أسقط عبد الحميد من إسناده أخبرناه أبو عبد الله الحافظ ثنا أبو بكر بن إسحاق ثنا علي بن عبد العزيز ثنا عارم ثنا سعيد بن زيد ثنا أبو عبد الله الشقري ، أراه عن الحكم بن عتيبة ، عن مقسم ، عن ابن عباس ، في الحائض إذا وقع عليها . الحديث *

அம்ர் பின் கைஸ்

ஹகம் என்பவரிடமிருந்து அம்ர் பின் கைஸ் என்பவரும் அறிவித்துள்ளார். இவரும் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பாளர் தொடரில் எந்த பலவீனமும் இல்லை.

السنن الكبرى للنسائي – كتاب عشرة النساء

ذكر الاختلاف على الحكم بن عتيبة فيه – حديث : ‏8817‏4826

أخبرنا الحسن بن محمد الزعفراني ، عن محمد بن الصباح ، قال : حدثنا إسماعيل بن زكريا ، عن ثم ذكر عمرو بن قيس عن الحكم ، عن مقسم ، عن ابن عباس ، قال : واقع رجل امرأته وهي حائض ، فأمره النبي صلى الله عليه وسلم أن يتصدق بنصف دينار *

இந்த அறிவிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள்

இப்னு அப்பாஸ் (ரலி)

மிக்சம்

ஹகம்

அம்ர் பின் கைஸ்

இந்த அறிவிப்பில் ஹகம் மிக்சமிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது. ஆனால் ஷக்ஃபாவின் அறிவிப்பில் ஹகமிற்கும் மிக்சமிற்கும் இடையே அப்துல் ஹமீத் இடம்பெற்றுள்ளார். எனவே இந்த அறிவிப்பில் ஹகமிற்கும் மிக்சமிற்கும் இடையே அப்துல் ஹமீத் விடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கின்றது. விடுபட்டவர் நம்பகமானவராக இருப்பதால் அறிவிப்பாளர் தொடரில் ஏற்பட்டுள்ள இந்த முறிவு எந்த வகையிலும் இந்த செய்தியை பாதிக்காது.

ஆய்வின் சுருக்கம்

மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் கணவன் உடலுறவு கொண்டால் இந்தத் தவறுக்குப் பரிகாரமாக அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் முரண்பாடில்லை. இப்னு அப்பாஸ் தனது பத்வாவை கூறிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்படுத்தியதின் அடிப்படையில் இரண்டு விதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இதை எடுத்துக்கொள்ள முடியும்.

இதற்கு ஷுஃபா, கதாதா, அம்ர் பின் கைஸ் ஆகிய மூவரின் அறிவிப்புகள் சான்றாக உள்ளன. பலவீனமான அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு சரியான இந்த அறிவிப்புக்களை மட்டும் கவனித்தால் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்று என முடிவு செய்வதில் எந்தக் குழப்பமும் இல்லை.

இது நபி (ஸல்) அவர்களின் கூற்றா? என்பதில் அறிஞர்களுக்கிடையே பலத்த கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் ஆய்வு செய்தவரை இது நபி (ஸல்) அவர்களின் கூற்று எனக் கூறும் அறிஞர்களின் கருத்தே சரியாகத் தெரிகின்றது. அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கட்டுரையை நாம் எழுதியுள்ளோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.

ஒரு தீனார் என்பது அன்று வழக்கத்தில் இருந்த தங்க நாணயமாகும். சுமார் நான்கரை கிராம் எடை கொண்ட நாணயம் தீனார் எனப்படும். நான்கரை கிராம் அல்லது இரண்டேகால் கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகையை தர்மம் செய்ய வேண்டும் என்பது இதற்கான பரிகாரமாகும்.