Tamil Bayan Points

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

Last Updated on November 16, 2022 by

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் உங்களைக் காப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தனர். இந்தப் பன்னிரண்டு பேர் தான் மதீனாவாசிகளில் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்களாவர்.

அவர்கள் விபரம் வருமாறு:

  1. அஸ் அத் பின் சுராரா (ரலி)
  2. உசைத் பின் ஹுலைர் (ரலி)
  3. அபுல் ஹைஸன் (ரலி)
  4. சஅது பின் கைஸமா (ரலி)
  5. சஅது பின் அர்ரபீவு (ரலி)
  6. அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)
  7. அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஹராம் (ரலி)
  8. சஅது பின் உபாதா (ரலி)
  9. முந்திர் பின் அம்ரு (ரலி)
  10. பரா பின் மஃரூர் (ரலி)
  11. உபாதா பின் சாமித் (ரலி)
  12. ராஃபிவு பின் மாலிக் (ரலி)