Tamil Bayan Points

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

கேள்வி-பதில்: உணவு

Last Updated on February 13, 2021 by

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

கூடாது

யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர்.

யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள்.

கோரைப் பற்கள் உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري (7/ 96)
5530 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ» تَابَعَهُ يُونُسُ، وَمَعْمَرٌ، وَابْنُ عُيَيْنَةَ، وَالمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ

அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.

புகாரி (5530)

யானையின் வாயில் வளரும் இரண்டு தந்தங்களையும் கோரைப் பற்கள் என்று கருதுவோர் இந்த ஹதீஸின் அடிப்படையில் அதை உண்ணக்கூடாது என்று கூறுகின்றனர்.

இதை கோரைப் பல்லாக கருதாதவர்கள் யானையின் இறைச்சியை உண்ண மார்க்கத்தில் எந்தத் தடையும் சொல்லப்படவில்லை. எனவே இது அனுமதி என்று வாதிடுகின்றனர்.

தந்தம் என்பது யானையின் மேல் தாடையில் வளரும் பல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

யானையின் தந்தத்திற்கு அரபு மொழியில் நாப் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. மேற்கண்ட ஹதீஸில் கோரைப் பல் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் நாப் என்ற இந்த வார்த்தையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே நாப் (கோரைப் பல்) உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என்ற நபியின் கூற்று அடிப்படையில் யானை உண்ணத் தகுந்த பிராணி இல்லை என்பதே சரியான கருத்தாகத் தெரிகின்றது.

காண்டாமிருகம் சிங்கம் புலியைப் போன்று கோரைப் பற்கள் உள்ள பிராணியாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இதுவும் உண்ணத் தகுந்த பிராணியில்லை.