Tamil Bayan Points

வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் உண்டா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on October 11, 2022 by Trichy Farook

வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம் உண்டா?

வித்ரில் குனூத் ஓதுவது பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பலவீனமாக உள்ளன.

ஆயினும் வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் உள்ளது.

سنن النسائي
1745 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: قَالَ الْحَسَنُ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ فِي الْقُنُوتِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»

வித்ரில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில சொற்களை எனக்குக் கற்றுத் தந்தார்கள். அந்தச் சொற்களாவன: அல்லஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத, வ ஆஃபினீ ஃபீ மன் ஆஃபைத்த, வ தவல்லனீ ஃபீ மன் தவல்லைத்த, வபாரிக் லீ ஃபீமா அஃதைத்த, வ கினீ ஷர்ர மா களைத்த, இன்னக் தக்ளீ, வலா யுக்ளா அலைக்க, வ இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வ தஆலைத்த என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரன் ஹஸன் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : நஸாயீ-1745 , அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, தாரிமி

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

புரைத் பின் அபீ மரய்ம் என்ற அறிவிப்பாளர் குறித்தும் அபூ இஸ்ஹாக் குறித்தும் குறை கூறி இதைப் பலவீனம் என்று சிலர் கூறியுள்ளது முற்றிலும் அறியாமையாகும். அவர்கள் நம்கமான அறிவிப்பாளர்களாவர் என்பதில் சந்தேகம் இல்லை.