Tamil Bayan Points

Category: பொருளாதாரம்

q118

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing)

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing)  மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing). எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் […]

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? கேள்வி: வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும்.  வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும் நாம் பங்கு பெறுதல் வராது. வங்கியில் தூய்மைப் பணிகளில் ஈடுபடக் கூடியவர், டீ காபி செய்து கொடுப்பவர் போன்ற பணிகளில் ஈடுபடலாம்; வட்டிக்கு கணக்கு எழுதக் கூடியவர்களாக, வட்டிக்கு சாட்சி சொல்லக்கூடிய பணிகளில் ஈடுபடக்கூடாது என்பது நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருக்கும் போது, வங்கியில் இந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையில் பணி […]

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன? பதில் வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குத் தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை. வீட்டை இடித்து கட்டுவதற்கோ வீட்டின் […]

வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

 உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா? பதில் ஏற்கப்படும் வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். […]

வங்கியல் கிளீனிங் வேலை செய்யலாமா?

? நான் துபையில் ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கின்றேன். அந்தக் கம்பெனியில் எனக்கு, வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் ஆபீஸ் பாய், கிளீனிங் போன்ற வேலைகளைக் கொடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட வேலையைச் செய்யலாமா? பதில் தீமையை தடுக்க இயலாது. எனவே, செய்யக் கூடாது. செய்யும் வேலை சரியானதாக இருந்தாலும் செய்யக் கூடிய இடம் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்கள் நடக்காத இடமாக இருக்க வேண்டும். உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். […]

ஊது பத்தி தயாரிப்பது, விற்பது கூடுமா?

பீடி, சிகரெட், பான்பராக் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்பதால் அவற்றைத் தயாரிப்பதோ, விற்பதோ கூடாது என்கிறோம். இது போல் ஊது பத்திகள் பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், தர்காக்கள் போன்றவற்றில் ஆராதனை களுக்காகவே பயன் படுத்தப் படுகின்றன. எனவே ஊது பத்திகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை கூடுமா? பதில் கூடும் ஹராமான பொருட்களை விற்பதும் தடுக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக பன்றி இறைச்சியை எடுத்துக் கொள்வோம். இதை பயன்படுத்துவது எப்படி ஹராமோ அது […]

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம். பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா? பதில் வரைமுறை இல்லை வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அது போன்று பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து அதற்குத் தக்க விலை வைத்துக் கொள்வதற்கும் தடை ஏதும் இல்லை. விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் […]

வட்டியை பெற்று தானம் செய்யலாமா?

போஸ்ட் ஆபீஸில் சிறு சேமிப்பு அக்கவுண்ட் சேர்ந்துள்ளோம். அதற்கு சிறிதளவு வட்டி வரும். அந்தப் பணத்தை தானம் செய்தால் அதில் தவறு உள்ளதா? இது தவறு என்றால் சிறு சேமிப்பு எப்படிச் சேருவது? பதில் வட்டியை பெறவே கூடாது அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் […]

இலவசத்தை தராமல் விற்கலாமா?

சோப்புக்கு ஷாம்பு இலவசம், கிரைப் வாட்டருக்கு தம்ளர் இலவசம் என்று பலவித பொருட்களுக்கு இலவசம் என்று போட்டு விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற இலவசங்களை சில்லரைக் கடைக் காரர்கள் நுகர்வோருக்கு வழங்காமல் வைத்துக் கொள்வது பாவமான செயலா? இலவசம் என்று போட்டு வரும் பொருட்களில் சில்லரைக் கடைக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலாபத் தொகையைக் குறைத்து விடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பதில் கூடாது பொதுவாக இலவசம் என்று எதுவுமே கிடையாது. சோப்புக்கு ஷாம்பு இலவசம் என்றால், சோப்புக்கும் […]

பட்டு, தங்கத்தை பிறமத மக்களுக்கு விற்கலாமா?

? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா? பதில் விற்கலாம் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப் பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” […]

குங்குமம், விபூதி, மஞ்சள் விற்கலாமா?

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் விற்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? பதில் ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்தவற்றிக்கும் மார்க்கம் தடைசெய்தவற்றிக்கும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அந்த பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும் காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனை கொலை செய்யப்பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனெனில் இந்த கத்தி காய்கறி வெட்ட மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதால் அதை […]

ஒத்தி, போகியம் கூடுமா?

ஒத்தி, போகியம் கூடுமா? வாகனம் அடமானம் பெறும்போது அதை கொடுப்பவரின் அனுமதியுடன் அனுபவிப்பது கூடும் என்ற அடிப்படையில் போகியத்திற்குரிய வீட்டை பயன்படுத்தலாம். போகியத்திற்கு பணம் கொடுப்பவர் ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் அந்த முதலீட்டுக்கு என்ன இலாபம்? அதற்குதான் வீடு பயன் படுத்தப் படுகிறது. உதாரணமாக இரண்டு வருடத்திற்கு போகியத்திற்கு பணம் கொடுக் கும்போது இரண்டு வருடம் கழித்து வீட்டின் விலை கூடுகிறது. ஆனால் பணம் கொடுத்தவரின் பணம் மதிப்பு குறைகிறது. இந்த நஷ்டத்திற்கு என்ன செய்வது? […]

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா? பதில் சங்கிலித் தொடராக இருப்பின் கூடாது எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் […]

கடனாளி ஹஜ் செய்யலாமா?

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? பதில்: கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவர் கடனாளி ஆக […]

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா?

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா? கூடாது. திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்றால் அது கூடாது.  வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இது தான் சட்டமாகும். வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக என்னுடைய […]

வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?

வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா? வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் போது வாங்கலாம் என்றால் நம் இடத்தை அல்லது நம் கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுக்கலாமே என்று யாரும் கருதக் கூடாது. இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும். ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.

வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா?

வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா? ஆம். ஹலால் தான். மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும். 1 . அடிப்படையில் ஹராம். 2 . புறக் காரணத்தால் ஹராம். பன்றி இறைச்சி, தாமாகச் செத்தவை எப்படி ஹராமாக உள்ளதோ அது போல் பிறரிடமிருந்து முறைகேடாகப் பெற்ற பொருளும் ஹராமாகும். ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு பன்றி இறைச்சி எந்த வழியில் நமக்குக் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையில் இருந்து அது மாறப் போவதில்லை. நம்முடைய சொந்தப் […]

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்?

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், “(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் […]