Tamil Bayan Points

Category: மத்ஹபுகள்

u108

14) முடிவுரை

முடிவுரை இந்த மார்க்கத்துக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்வின் சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. எளிதானது. யாருக்கும் அனீதி இழைக்காதது. நாகரீகமானது. ஆனால் மத்ஹபுகள் மடமைகளின் தொகுப்பாகவும், ஆபாசமாகவும் அருவருக்கத் தக்கவையாகவும், இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், எல்லாவிதமான பாவங்களையும் மென்மைப்படுத்தி அவற்றைச் செய்யத் தூண்டக்கூடியதாகவும், நமது இறையச்சத்தையும் வணக்க வழிபாட்டையும் பாழாக்கக் கூடியதாகவும், பெண்களுக்கு கொடுமை இழைப்பதாகவும், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிரான போர்ப் பிரகடணமாகவும், மறுமையில் நரகப்படுகுழியில் நம்மைத் தள்ளக்கூடியதாகவும் அமைந்துள்ளதால் மத்ஹபுகளை சமுதாயத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவோம். […]

13) ஆபாச சட்டங்கள்

ஆபாச சட்டங்கள் விபச்சாரத்துக்கான தண்டனையில் இருந்து தப்பிக்க தந்திரம் விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும். இது திருக்குர்ஆன் கூறும் சட்டம். அவ்வாறு கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம். ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான மஙானி எனும் தமிழ்நூலில் இது குறித்து எழுதியுள்ள சட்டத்தைப் பாருங்கள்! ஐம்பது சிறு குச்சிகளுள்ள ஒரு கட்டினால் இரண்டு தடவை அடித்தாலும் நூறு அடிகள் நிறைவேறிவிடும். ஆனால், அதிலுள்ள ஒவ்வொரு குச்சியும் அவனுடைய மேனியில் பட வேண்டும். […]

12) குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள் திருட்டை ஊக்குவிக்கும் மத்ஹபுகள் (وَإِنْ) نَقَبَ ثُمَّ (نَاوَلَهُ آخَرَ مِنْ خَارِجِ) الدَّارِ (أَوْ أَدْخَلَ يَدَهُ فِي بَيْتٍ وَأَخَذَ) وَيُسَمَّى اللِّصَّ الظَّرِيفَ. وَلَوْ وَضَعَهُ فِي النَّقْبِ ثُمَّ خَرَجَ وَأَخَذَهُ لَمْ يُقْطَعْ فِي الصَّحِيحِ . الدر المختار ஒருவன் சுவற்றில் துளை போட்டு உள்ளே சென்று, மற்றொருவன் வீட்டுக்கு வெளியில் இருந்து பொருளை வாங்கினால், அல்லது வீட்டுக்குள் கையை விட்டு எடுத்தால் அவனது கை […]

11) தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல்

தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல் மார்க்கச் சட்டங்கள் மறுமை வாழ்வுக்கு அஞ்சி கடைப்பிடிக்க வேண்டியவை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் மார்க்கச் சட்டம் இதுதான் என்று தெரிந்து கொண்டு அதை மீறுவதற்காக மத்ஹப் நூல்களில் தந்திரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அல்லாஹ்வையே ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை எவன் உள்ளத்தில் உள்ளதோ அவன் தான் தந்திரங்களைக் கையாண்டு அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவான். அத்தகைய கேடுகெட்டவர்களால் தான் மத்ஹப் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டங்கள் மத்ஹப் […]

10) குடும்பப் பிரச்சனைகள்

குடும்பப் பிரச்சனைகள்  நான்கு வருட கர்ப்பம் ஒரு குழந்தை கர்ப்ப அறையில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதில் பல சட்டப்பிரச்சனைகள் உள்ளன. கணவனுடன் தொடர்பு இல்லாத பெண் பெற்றெடுக்கும் குழந்தை அந்தக் கணவனுடைய குழந்தை என்று முடிவு செய்வது முக்கியமான பிரச்சனையாகும். இது குறித்து மத்ஹப் சட்டப்புலிகள் கூறுவது என்ன என்பதைப் பாருங்கள்! فَصْلٌ فِي ثُبُوتِ النَّسَبِ (أَكْثَرُ مُدَّةِ الْحَمْلِ سَنَتَانِ) لِخَبَرِ عَائِشَةَ – رَضِيَ اللَّهُ عَنْهَا – كَمَا مَرَّ […]

9) நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள் இவர்களின் வடிகட்டிய முட்டாள்தனத்தை மேலும் பாருங்கள் واعلم أن لحيته عليه الصلاة والسلام كانت عظيمة ولا يقال كثيفة لما فيه من البشاعة وكان عدد شعرها مائة ألف وأربعة وعشرين ألفا بعدد الأنبياء كما في رواية إعانة الطالبين மொத்த நபிமார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபிகள் நாயகத்தின் தலைமுடிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரமாகும். நூல் ஷாஃபி […]

3) வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்!

வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்! இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர்கள் வழியாக மனித குலத்துக்கு வழங்கப்பட்ட மார்க்கமாகும். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அறிந்து கொள்க! இந்தத் தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன்:39:3.) இஸ்லாத்தின் பெயரால் எதைச் சொல்வதாக இருந்தாலும், செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்ற  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இம்மார்க்கத்தின் அதிபதி அல்லாஹ் தான் என்பதன் அர்த்தம் இதுதான். இந்த […]

2) நான்கு இமாம்கள் ஓர் அறிமுகம்

நான்கு இமாம்கள் ஓர் அறிமுகம் இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக இருந்தும் அவர்கள் பெயரால் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. தாபியீன்களில் ஏராளமான மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பெயராலும் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு அவர்களில் […]

8) மடமையான சட்டங்கள்

மடமையான சட்டங்கள் இமாமை அறுத்து குர்பானி கொடுக்கலாம். மத்ஹபு அறிஞர்கள் எந்த அளவு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்கும், ஆபாசமாகச் சிந்திப்பதையே ஆய்வு என்று கருதியுள்ளனர் என்பதற்கும் பின் வரும் அதிசயச் சட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது. فإن نزا مأكول على مأكولة فولدت ولدا على صورة الآدمي فإنه طاهر مأكول فلو حفظ القرآن وعمل خطيبا وصلى بنا عيد الأضحى جاز أن يضحى به بعد ذلك وبه يلغز […]

7) தொழுகையின் சட்டங்கள்

தொழவைக்கும் இமாமுக்கு தகுதி என்ன? தொழுகை நடத்தும் இமாமாக ஒருவரை நியமிக்க வேண்டுமானால் அவருக்கு கீழ்க்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார் கூறுகிறது. ثُمَّ أَصْبَحُهُمْ: أَيْ أَسْمَحُهُمْ وَجْهًا، ثُمَّ أَكْثَرُهُمْ حَسَبًا (ثُمَّ الْأَشْرَفُ نَسَبًا) زَادَ فِي الْبُرْهَانِ: ثُمَّ الْأَحْسَنُ صَوْتًا. وَفِي الْأَشْبَاهِ قَبِيلَ ثَمَنِ الْمِثْلِ: ثُمَّ الْأَحْسَنُ زَوْجَةً. ثُمَّ الْأَكْثَرُ مَالًا، ثُمَّ الْأَكْثَرُ جَاهًا (ثُمَّ […]

6) உளூவின் சட்டங்கள்

உளூவின் சட்டங்கள் மத்ஹப் நூல்களில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகவும், ஆதாரமற்றதாகவும் தொழுகையைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம் தலை என்றால் ஒரு முடி என்று அர்த்தமாம் தலைக்கு மஸஹ் செய்வது உளுவின் கடமைகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு எப்படி மஸஹ் செய்ய வேண்டும் என்பதைச் செயல் மூலம் விளக்கியுள்ளனர். ஆனால் ஷாஃபி மத்ஹப் சட்டத்தைப் பாருங்கள்! قوله ولو بعض شعرة واحدة […]

5) இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள் மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை உருவாக்குவார்கள். மத்ஹபு இமாம்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் போதிப்பார்கள். ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு […]

4) மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்

மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள் அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது அனைவரும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் பாமர மக்கள் மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி மத்ஹபை நியாயப்படுத்துகின்றனர். இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை. மத்ஹபை நம்பக் கூடியவர்கள் உலகில் ஒரே ஒரு மத்ஹப் தான் உள்ளது எனக் கூறுவதில்லை. நான்கு மத்ஹபுகள் உள்ளன என்பதுதான் அவர்களின் வாதம். இந்த நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் […]

1) முன்னுரை

முன்னுரை இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருளைத் தக்க முறையில் ஒருவர் அறிந்து கொண்டால் மத்ஹபுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார். லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரியவன் […]