Tamil Bayan Points

Category: ஜனாஸாவின் சட்டங்கள்

u390

51) வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று பலரும் ம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன. யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர். இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ் திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமானது என்பதை […]

52) இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை

இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகிறது. மறுமணத்தைத் தள்ளிப் […]

53) காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை

அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும். இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து […]

54) மறுமணத்தைத் தடுக்கக் கூடாது

கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது. தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு […]

55) இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை

எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். திருக்குர்ஆன் 2:134 எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை […]

56) கடன்களை அடைத்தல்

ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவர் செய்த நல்லறங்கள் மரணித்தவருக்குச் சேர வேண்டுமென்று அவரது வாரிசுகள் விரும்பினால் அவர் பட்ட கடன்களை அடைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

57) இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்

இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் ‘எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுகின்றனர். திருக்குர்ஆன் 59:10 குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும். ‘ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் […]

58) கண்ணீர் விட்டு அழலாம்

ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் […]

59) அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!

அழுவதற்கும், துக்கத்தில் ஆழ்ந்து போவதற்கும் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சரியாக உண்ணாமல் பருகாமல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதற்கும் அனுமதி உண்டு. அனுமதி இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின் அழுவதற்கு அனுமதி இல்லை. நான்காவது நாளில் வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். அதன் பின்னரும் அழுதால், துக்கத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நிலையை அடைவார்கள். ‘இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் […]

60) சிரைத்தும் சிரைக்காமலும்

தலை முடியை மழிப்பது என்றால் தலை முழுவதும் மழிக்க வேண்டும். ஒரு பகுதியை மட்டும் மழித்துவிட்டு மற்ற பகுதியை மழிக்காமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டு பக்கம் இரண்டு குடுமிகளை விட்டுவிட்டு மற்ற பகுதியைச் சிரைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். […]

61) மரணச் செய்தியை அறிவித்தல்

ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. அது விரும்பத்தக்கது ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். ‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1576 இப்னு அப்பாஸ் […]

62) மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை

கண்களை மூடுதல் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும். அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. உடனே அதை மூடினார்கள். ‘உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைத் தொடர்கிறது’ என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 1528 உடலுக்கு நறுமணம் பூசுதல் இறந்தவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வந்தால் அதை மறைப்பதற்காக நறுமணம் […]

63) இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டுமா?

இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன. ‘பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு, ‘முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்பதை அதில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: உமைர் (ரலி) நூல்கள்: அபூ […]

64) அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்

ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுஸைன் […]

65) இறந்தவரைக் குளிப்பாட்டுதல்

ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலைக் குளிப்பாட்டுவது அவசியம். இறந்தவுடன் கசப் மாற்றுவது’ என்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர். பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர். சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் குளிப்பாட்டுகின்றனர். இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும் என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் […]

66) ஆடைகளைக் களைதல்

உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் அதுவும் தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். ‘மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை’ என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை […]

67) குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும். ‘ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ-6655 (3/395), […]

68) புதிய ஆடையில் கஃபனிடுதல்

மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் என்பதை அறியலாம். ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை. ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மேலாடையைக் கொண்டு வந்தார். ‘நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன்’ என்று அவர் கூறினார். அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது […]

69) தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம்

நாம் மரணித்த பின் நமக்கு இது தான் கஃபனாக அமைய வேண்டும் என்று விரும்பி தனது கஃபன் துணியை ஒருவர் தயார் படுத்தி வைக்கலாம். அவ்வாறு ஒருவர் தயார் படுத்தி வைத்திருந்தால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். மேற்கண்ட ஹதீஸிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

70) தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல்

(என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ‘நபிகள் நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம். அதில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை’ என்று நான் கூறினேன். ‘எந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘திங்கள் கிழமை’ என்று நான் கூறினேன். ‘இன்று என்ன கிழமை?’ எனக் கேட்டர்கள். ‘திங்கள் […]

71) முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா?

மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. வாழும் போது தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும். மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை, சட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை அறியலாம். கிரீடம், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கபனிடுவது கெட்ட முன்மாதிரியாகும்.

72) வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்

நியாயத்துக்காக நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது. முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ‘அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி) நூல்: அஹ்மத் 22547 ஆயினும் இது கட்டாயமானது அல்ல. ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ஸஃபிய்யா அவர்கள் இரண்டு […]

73) நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆடையில் இருவரைக் கஃபனிடலாம்

உஹதுப் போரில் கொல்லப்பட்ட என் தந்தையும், என் சிறிய தந்தையும் ஒரு போர்வையில் கஃபனிடப்பட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1348 உஹதுப் போரில் கொல்லப்பட்ட இருவரை ஒரு ஆடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1343. 1348, 4080

74) உடலை எடுத்துச் செல்லுதல்

குளிப்பாட்டி, கஃபனிட்ட பின் தொழுகை நடத்துவதற்காகவும், தொழுகை முடிந்து அடக்கம் செய்வதற்காகவும் அடக்கத்தலம் நோக்கி உடலை எடுத்துச் செல்ல வேண்டும். உடலை எடுத்துச் செல்பவர்களும், உடன் செல்பவர்களும், உடலை வழியில் காண்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உள்ளன.

75) சுமந்து செல்லும் பெட்டி – சந்தூக்

ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கு என குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்துகின்றனர். சந்தாக் அல்லது சந்தூக் என்ற பெயரால் இப்பெட்டி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை. ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். […]

76) தோளில் சுமந்து செல்லுதல்

ஜனாஸாவைப் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால்… என்பன போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எனவே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்வதை விட தோளில் சுமந்து செல்வதே சிறப்பானதாகும். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். வெளியூரில் மரணித்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் தோளில் சுமந்து செல்வது சாத்தியமாகாது. ஊரை விட்டு வெகு தொலைவில் அடக்கத்தலம் […]

77) ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்

உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நாலைந்து பேர் போதும் என்றாலும் உடலைப் பின் தொடர்ந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டனர். அவைகளாவன: ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், நோயாளிகளை விசாரிக்கச் செல்லுதல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், சத்தியத்தை நிறைவேற்றுதல், ஸலாமுக்குப் பதில் […]

78) பெண்கள் ஜனாஸாவைப் பின் தொடராமல் இருப்பது சிறந்தது

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது அதிக நன்மை தரக் கூடியது என்றாலும் ஜனாஸாவைப் பெண்கள் பின் தொடர்ந்து செல்லாமல் இருப்பது நல்லது. பின் தொடர்ந்தால் குற்றமாகாது. ‘ஜனாஸாவைப் பின் தொடர வேண்டாம் என்று (பெண்களாகிய) நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (ஆயினும்) வலிமையாகத் தடுக்கப்படவில்லை’ என்று உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். நூல்: புகாரி 1278 மென்மையான முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றால் அதைச் செய்யாமலிருப்பது நல்லது என்றே புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் […]

79) விரைவாகக் கொண்டு செல்லுதல்

ஜனாஸாவைத் தோளில் சுமந்து விட்டால் ஆடி அசைந்து நடக்காமல் வேகவேகமாகக் கொண்டு செல்ல வேண்டும். ‘ஜனாஸாவை விரைவாகக் கொண்டு செல்லுங்கள். அது நல்லவரின் உடலாக இருந்தால் நல்லதை நோக்கிக் கொண்டு சென்றவராவீர்கள். அது கெட்டவரின் உடலாக இருந்தால் கெட்டதை (சீக்கிரம்) தோளிலிருந்து இறக்கியவர்களாவீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1315 ‘ஜனாஸா (கட்டிலில்) வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக […]

80) வாகனத்தில் பின் தொடர்தல்

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் நடந்தும் செல்லலாம்; வாகனத்தில் ஏறியும் பின் தொடரலாம். ‘வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதி 952, நஸயீ 1917, அஹ்மத் 17459, 17468, 17475 வாகனத்தில் பின் தொடரக் கூடாது என்ற கருத்துடையவர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு […]

81) ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது எந்த துஆவும் இல்லை

ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது பல்வேறு திக்ருகளைக் கூறிக் கொண்டு செல்லும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு என தனிப்பட்ட திக்ரோ, துஆவோ இருந்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயம் ஓதிக் காட்டியிருப்பார்கள். அவர்கள் அவ்வாறு ஓதி இருந்தால் அது நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது மௌனமாகத் தான் செல்ல வேண்டும்.

82) ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும். ‘உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1308 ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் […]

83) எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். நாங்களும் உட்கார்ந்தோம்’ அறிவிப்பவர் அலீ (ரலி) நூல்: முஸ்லிம் 1599 இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர். எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை’ என்பது போன்ற […]

84) ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை உட்காரக் கூடாது

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும். ‘அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் வரை நில்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: புகாரி 1307, 1308, 1310 […]

85) ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்

ஜனாஸாவைச் சுமந்தவர்களும், பின் தொடர்பவர்களும் ஓடுகிறார்களோ என்று கருதும் அளவிற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வது சிறந்ததாகும். நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத் கட்டிலின் முன்னால் நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக ‘வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்’ என்று கூறினர். அப்போது மெதுவாக அவர்கள் ஊர்ந்து சென்றனர். மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ […]

86) யாருக்கு ஜனாஸா தொழுகை?

இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும். இவ்வுலகில் நன்மைகளை வேண்டி முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மறுமை நன்மைகள் இல்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்லாம் பிரகடனம் செய்வதால் இறைவனை நிராகரிக்காதவர்களுக்கும், இணை கற்பிக்காதவர்களுக்கும் […]

87) முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதை இறைவன் தடை செய்து விட்டான். அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையை எனக்குக் […]

88) தக்பீர் கூறுதல்

ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும். அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்’ என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்’ எனக் கூறி துவக்க வேண்டும். ‘தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ […]

89) ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?

ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது. […]

90) தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை

நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும். முதல் தக்பீருக்குப் பின்… 1 . முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். […]

91) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர். அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை […]

92) ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்த வேண்டுமா?

ஜனாஸாத் தொழுகையில் ஒவ்வொரு தடவை தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக் கொள்ளும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. தக்பீர் என்ற சொல்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல் என்பதே பொருள். எனவே நான்கு தடவை அல்லாஹு அக்பர் எனக் கூறுவது தான் நபிவழியாகும். கைகளை அவிழ்த்துக் கட்டுவதோ, அல்லது உயர்த்திக் கட்டுவதோ நபிவழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் […]

93) ஸலாம் கூறுதல்

கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82 மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸா தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து […]

94) உடலை அடக்கம் செய்தல்

வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது இறந்தவர்களை குறிப்பாக சிறுவர்களை வீடுகளில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் வீடுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் நிலவுகிறது. இந்த நம்பிக்கை தவறானதாகும். வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது. ‘(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 432, 1187 வீடுகளை […]

95) அடக்கம் செய்யக் கூடாத நேரங்கள்

சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1373 இந்த மூன்று நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யலாம். இரவில் அடக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்வது தவறில்லை. தமது தோழர் ஒருவர் மரணித்து, குறைவான அளவு கஃபனிடப்பட்டு […]

96) ஒரு குழிக்குள் பலரை அடக்கம் செய்தல்

ஒரு நேரத்தில் அதிகமான மக்கள் இறந்து விட்டால் அனைவருக்கும் தனித் தனியாக குழிகள் வெட்டுவது சாத்தியமில்லாமல் போகலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய அளவில் குழிகள் வெட்டி இருவர் அல்லது மூவரை அந்தக் குழியில் அடக்கம் செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை ஒரு கப்ருக்கு இருவர் என்ற முறையில் அடக்கம் செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1345

97) குழியை விசாலமாகத் தோண்டுதல்

அடக்கம் செய்வதற்காகக் குழிகளை வெட்டும் போது தாராளமாகவும், விசாலமாகவும் வெட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘தலைப் பக்கம் விசாலமாக்கு! கால் பக்கம் விசாலமாக்கு!’ என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்ஸாரித் தோழர் நூல்: அபூ தாவூத் 2894 மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல் அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் […]

98) உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அஹ்மத் 4982, 51115 குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத் 2798 குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் […]

99) அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுத்தல்

என் தந்தையுடன் மற்றொருவரும் சேர்ந்து ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டார். இதை என் மனம் ஒப்பவில்லை. எனவே என் தந்தையின் உடலை வெளியே எடுத்துத் தனியாக வேறு கப்ரில் மறு அடக்கம் செய்தேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1352 மற்றொரு அறிவிப்பில் ஆறு மாதம் கழித்து அவரது உடலை வெளியே எடுத்தேன். அவரது காதைத் தவிர உடலின் மற்ற பாகங்கள் சற்று முன் வைக்கப்பட்டது போல் இருந்தன என்று கூறப்படுகிறது. (புகாரி 1351) உஹதுப் […]

100) கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்

அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். ‘இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள். பின்னர் […]

Next Page » « Previous Page